(எம்.ஆர்.எம்.. வசீம், இராஜதுரை ஹஷான்)
தற்போதைய நெருக்கடியான நிலையில் கிரிக்கெட்டுக்கான தடையை நீக்கிக் கொண்டு 19க்கு கீழ் உலகக் கிண்ண போட்டியை நாட்டுக்கு பெற்றுக் கொள்வதை உறுதி செய்யும் நடவடிக்கையை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
மாறாக இதனை அரசியல் ரீதியாக முன்னெடுக்கக் கூடாது என அமைச்சரும் கிரிக்கெட் தொடர்பான அமைச்சரவை உப குழுவின் உறுப்பினருமான கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (17) விஷேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய நிலையில் கிரிக்கெட்டுக்கான தடையை நீக்கிக்கொண்டு 19க்கு கீழ் உலகக்கோப்பை போட்டியை நாட்டுக்கு பெற்றுக் கொள்வதை உறுதி செய்யும் நடவடிக்கையை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து மேற்கொள்வது அவசியமாகும். இதனை அரசியல் ரீதியாக முன்னெடுக்க கூடாது என்பது முக்கியமாகும்.
அத்துடன் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்பாக ஐசிசி யுடன் கலந்துரையாடுமாறு அமைச்சரவை உப குழுவிற்கு ஜனாதிபதி பொறுப்பை ஒப்படைத்துள்ளார். அதற்கான வேண்டுகோளை நாம் ஐசிசிக்கு விடுத்துள்ளோம். கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி நியமித்த அமைச்சரவை உப குழு தொடர்பில் பலருக்கும் தெளிவில்லாமல் உள்ளது.
இந்த குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு என்ன என்பது தொடர்பில் சிலர் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் சம்பந்தமாக பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்காகவே இந்த குழுவை அவர் நியமித்துள்ளார் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், கிரிக்கெட் சபை, விளையாட்டுத்துறை, அமைச்சர் விளையாட்டுத் துறை இராஜாங்க அமைச்சர் ஆகிய தரப்பினரை நாம் சந்தித்துள்ளோம்.
முதலில் முழு பாராளுமன்றமும் இணைந்து விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தடை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமானால் எனக்கு ஜனவரியில் 19ற்கு கீழ் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மட்டுமின்றி டிவிசன் 1 கிடைக்காமலும் போகலாம்.
சிலர் நினைக்கலாம் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை. உள்ள சிக்கல்கள் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என. எனினும் அவ்வாறு டிவிஷன் 1 விளையாட சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் எமது விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய அனுபவங்கள் கிடைக்காமல் போகும். அவர்கள் முன்னோக்கிச் செல்வதும் தடைப்பட்டு விடும்.
மகளிர் கிரிக்கெட் வீரர்கள் 19ற்கு கீழ் வீரர்கள்,21ற்கு கீழ் வீரர்கள் ஆகிய அனைவருக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். சர்வதேச ரீதியான பிரச்சினையை தீர்ப்பதற்கு நாம் பாராளுமன்றத்தையோ அரசியலையோ சம்பந்தப்படுத்தக் கூடாது.
எமது நாட்டுக்கு சர்வதேச ரீதியான பிரச்சினைகள் பெருமளவு உள்ளன.
இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளருக்கு அல்லது ஆசிய கவுன்சிலின் செயலாளருக்கு விரல் நீட்டி பிரயோசனமில்லை. உருவாகியிருப்பது எமது நிர்வாகம் தொடர்பான பிரச்சினையே. அதனை சரி செய்வதற்கு நாம் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து வேறு நாடுகளை குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM