நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விரத உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கையில் தங்க மாம்பழத்துடன் நல்லூர் கந்தன் உள்வீதி உலா வந்த காட்சியை இன்று (17) காலை பக்தர்கள் கண்டுகளித்தனர்.
கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படும் இந்த நாட்களில் நல்லூரில் தினமும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, முருகப் பெருமான் காலையில் உள்வீதியிலும் மாலையில் வெளி வீதியிலும் உலா வருகின்றமை முக்கிய நிகழ்வாகும்.
இந்நிலையில், இன்றைய தினம் காலை தாமரை வாகனத்தில் எழுந்தருளி சிறிய மயிலில் தங்க மாம்பழத்துடன் முருகன் உலா வந்தார்.
அதனை தொடர்ந்து, நாளைய தினம் சனிக்கிழமை (18) மாலை சூர சம்ஹாரம் இடம்பெறவுள்ளது.
நாளை மாலை 4 மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெற்று, தொடர்ந்து சூரன் போர் நிகழும்.
அதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (19) மாலை திருக்கல்யாண உற்சவம் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM