நாடு வங்குரோத்து அடையக் காரணமானவர்களின் பிரஜா உரிமையை நீக்க ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க வேண்டும் - சஜித் கோரிக்கை

17 Nov, 2023 | 03:44 PM
image

(எம்.ஆர்.எம்.. வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய பொறுப்புக்கூறவேண்டிவர்கள் என உயர் நீதிமன்றம் பெயர் குறிப்பிட்டு தீர்ப்பளித்திப்பவர்களின் பிரஜா உரிமையை நீக்குவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (17) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதாரத்தை  திட்டமிட்டு வங்குரோத்து அடையச்செய்தமைக்கு பொறுப்புக்கூற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளிதிருக்கின்ற  மஹிந்த ராஜபக்ஷ், கோத்தாபய ராஜபக்ஷ், பசில் ராஜபக்ஷ் உள்ளிட்ட குழுவினருக்கு ஏன் இன்னும் தீர்வொன்று இல்லாமல் இருக்கிறது என மக்கள் மத்தியில் கலந்துரையாடப்பட்டு வருகிறது. 

இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறே செயற்படுவதற்கு இடமளிப்பதா? அதனால் அதிகமானவர்களின் பிரேரணையாக இருப்பது நாட்டை வேண்டுமன்றே வங்குரோத்து நிலைக்கு ஆளாக்கிய உயர் நீதிமன்றத்தினால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள  இவர்களுக்கு தொடர்ந்தும் சிவில் உரிமையை வழங்குவது பொருத்தம் இல்லை என்ற தெரிவிக்கின்றனர்.

அதனால்  அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் பிரஜா உரிமையை நீக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க வேண்டி இருப்பது விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாகவாகும். அதனை ஜனாதிபதியால் மாத்திரமே செய்ய முடியும். அதனால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு  நாட்டில் இருக்கும் 220 இலட்சம் மக்கள் சார்ப்பாக ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதன் மூலம் இந்த குற்றவாளிகளுக்கு எதிராக, இந்த நாட்டில் வியாபார நிலையங்கள்,  வாழ்வாதம், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த மந்நும் உயிர் பாதிப்பு ஏற்பட்ட இந்த அனைவரும் அடிப்படை உரிமை மீறல் மனு சமர்ப்பித்து நட்டஈடு பெற்றுக்கொள்ளும் முறையொன்றை ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பு முழு நாட்டிலும் செயற்படுத்த எதிர்பார்க்கிறோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4...

2024-09-15 18:16:57
news-image

யுக்திய நடவடிக்கை : போதைப்பொருள் குற்றம்...

2024-09-15 18:44:46
news-image

நல்லடக்கமா, எரிப்பா என்ற பிரச்சினை எழுந்தபோது...

2024-09-15 18:42:44
news-image

வடகிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை...

2024-09-15 17:32:34
news-image

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்திலிருந்து முழுமையாக...

2024-09-15 17:08:26
news-image

முறையான இலவச சுகாதார சேவைக்காக ஐக்கிய...

2024-09-15 17:17:38
news-image

ஒரு மில்லியன் தொழில் முனைவோர் திட்டம்...

2024-09-15 16:50:27
news-image

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம்...

2024-09-15 18:29:23
news-image

24 மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய்...

2024-09-15 16:57:39
news-image

கட்டுகஸ்தோட்டையில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு 

2024-09-15 16:17:53
news-image

யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரப்பகிர்வுடன்...

2024-09-15 17:48:43
news-image

கல்கிஸ்ஸையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2024-09-15 15:52:43