கதிர்.திருச்செல்வம் எழுதிய "உறவுகள் சொல்லும் உணர்வு" சிறுகதை நூல் அறிமுக விழா கடந்த புதன்கிழமை (15) மாலை 5.00 மணிக்கு திருகோணமலை, கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நூல் அறிமுகத்தை கவிஞர் க. யோகானந்தன் தலைமையில் மாகாண கல்வி அமைச்சின் திட்டப் பணிப்பாளர் ஏ.சி.எம். முஸ்ஸில் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ச.நவநீதன் கலந்துகொண்டார்.
நூல் திறனாய்வினை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழியியல் துறை பேராசிரியர் அ.ப.மு.அஸ்ரஃப் நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து, நூல் வெளியீடு இடம்பெற்றது. இதன்போது நூலின் முதல் பிரதியை அதிபர் யு. சுஜந்தினிக்கு பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ச. நவநீதன் வழங்கிவைத்தார்.
நிறைவாக, ஏற்புரை மற்றும் நன்றியுரையை நூலாசிரியர் கதிர்.திருச்செல்வம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM