நீரும் நெருப்பும் கோபமும் 

17 Nov, 2023 | 04:05 PM
image

கோபக்காரர்களை பற்றி நபிகள் நாயகம் என்ன சொல்கிறார் தெரியுமா?

கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்குபவனே வலிமை வாய்ந்தவன். கோபம் கொள்பவனை இறைவன் விரும்ப மாட்டான். 

கோபம் ஷைத்தானின் வெளிப்பாடாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கிறான். நீரால் மட்டுமே நெருப்பை அணைக்க முடியும். 

எனவே, கோபம் வந்தால் 'ஒளு' (தண்ணீரால் சுத்தம் செய்தல்) செய்துகொள்ள வேண்டும். 

கோபக்காரரான ஒருவர் நபிகள் நாயகத்திடம் ''எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்'' என கேட்டார். அதற்கு அவர், ''கோபம் கொள்ளாதீர். அதுவே உம்மை பலவித தீங்குகளில் இருந்து காப்பாற்றும்'' என பதிலளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right