ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள நிலங்களை மீளத்தரக்கோரி முல்லைத்தீவு கேப்பாபுலவில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக எதிர்வரும் சனிக்கிழமை (25.02.2017) காலை 10 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி விமானப்படை முகாமின் முன்பாக சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என  கடந்த மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 23வது நாளாக இன்றுவரை தொடர்கின்றது.

இந்நிலையில், தமது சொந்த நிலத்தை மீளத்தரக்கோரி போராடும் உறவுகளுக்காக அரசியல், இன, மத பேதங்கள், பிரதேசம் கடந்து சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து, நடத்தவுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.