கேட்டையும் ஆனியும் ; கவனம்!

17 Nov, 2023 | 01:05 PM
image

கேட்டை நட்சத்திரத்தை ‘ஜேஷ்ட’ நட்சத்திரம் என்றும் சொல்வார்கள், சோதிடப் பெருமக்கள். அதேபோன்று, ஆனி மாதத்தையும் 'ஜேஷ்ட மாதம்' என்பார்கள். ஏனென்றால், இந்த இரண்டுக்குமான குணாதிசயங்கள் அப்படி. இதனால்தான், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த தலைப் பிள்ளைக்கு – அது மகனானாலும் மகளானாலும் – ஆனியில் திருமணம் செய்து வைக்கக்கூடாது என்கிறார்கள்.

தற்காலத்தில் இந்த சோதிட அறிவியல் எல்லாம் சற்று நகைப்புக்குரியதாக மாறி வருவதையும் நாம் அறிவோம். ஆனால், உன்னித்துப் பார்த்தீர்கள் என்றால், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த தலைமகனுக்கோ, தலைமகளுக்கோ ஆனியில் திருமணம் செய்த பெற்றோர், ‘தாத்தா’ என்றோ, ‘பாட்டி’ என்றோ விளிச்சொல் கேட்பதில் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பார்கள்.

காரணம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த தலைப்பிள்ளைகள் ஆனியில் திருமணம் முடித்தால், செய்தொழில் சீர்கேடு, மகப்பேறு வாய்க்காதது என்று திருமணத்துக்குப் பின் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

இது சாமானியர்களுக்கு மட்டுமன்றி, எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் அதிகாரம் மிக்கவராக இருந்தாலும் அவர்களுக்கும் பொருந்தும். என்னதான் வாழ்க்கை வாய்த்தாலும் அதில் ஒரு திருப்தியின்மையை நிச்சயமாக உணர்வார்கள். இதனாலேயே அவர்களது திருமண வாழ்க்கை சுகிக்காது.

மகாகவி காளிதாசனின் ‘உத்திர காலாமிர்தம்’ என்ற நூலில் கேட்டை நட்சத்திரக்காரர்களின் வாழ்வு பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. 

ஒருவேளை, இது பற்றிய விளக்கமேதும் இன்றி, ஆனியில் திருமணம் முடித்த கேட்டை நட்சத்திரத் தலைப்பிள்ளைகளாக இருப்பின், கேட்டை நட்சத்திரத்தன்று துர்க்கை அம்மனுக்கு நெய்விளக்கு ஏற்றிவைத்து, சிவப்பு நிற அரளிப் பூ மாலை சாற்றி, கருணைக்கிழங்கு தானம் செய்து வழிபட்டு வர, கஷ்டங்கள் நீங்கிச் சுகமாக வாழலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right