(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க கடந்த 13ஆம் திகதி வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க விளையாட்டுக் குற்றச் சட்டத்தின் கீழ் விளையாட்டுத் தொடர்பான குற்றங்கள் உள்ளடக்கப்படுகின்றன.
போட்டி நிர்ணயம், ஊழல் மோசடி, சட்டவிரோத செயற்பாட்டு முன்னெடுப்பு சட்டவிரோத சூதாட்டம் தொடர்பான விவகாரங்கள் குறித்து தனக்குத் தெரியும் என்று தேர்வுக் குழுவின் தலைவர் தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக பிரமோதய விக்கிரமசிங்க, அவர் வகிக்கும் பதவியின் அடிப்படையில் இந்த அறிக்கை தீவிரமான அறிக்கை எனவும், இது தொடர்பில் சமூகத்தில் பெரும் விவாதம் உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம், இது தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM