(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கை தேசிய பராலிம்பிக் குழு (NPC) மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினர் (MAS Holdings) ஆகியோர் கூட்டாக இணைந்து ஆசிய பரா விளையாட்டு விழாவில் பதக்கம் வென்றவர்களை கெளரவிப்பு நிகழ்வு வியாழக்கிழமை (16) நடைபெற்றது.
இந்த கெளரவிப்பு நிகழ்வு கொழும்பு-10 இல் அமைந்துள்ள மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஹைவ் கேட்போர் கூடத்தில் (HIVE AUDITORIUM) வியாழக்கிழமை (16) காலை நடைபெற்றது.
அண்மையில் நடைபெற்று முடிந்த 4 ஆவது ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கை 2 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 11 பதக்கங்களை வென்று அசத்தியது.
இந்த கௌரவிப்பு நிகழ்வில் பதக்கம் வென்றவர்களுக்கு சிறப்பு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
தங்கம், வெள்ளி என 2 பதக்கங்களை வென்ற நுவன் இந்திக்க, தங்கப் பதக்கம் வென்ற பிரதீப் சோமசிறி ஆகியோர் முதலில் கெளரவிக்கப்பட்டனர்.
அவர்களைத் தொடர்ந்து வெள்ளிப் பதக்கம் வென்றவர்களான அமில பிரசன்ன, சமித்த துலான், ஜனனி விக்கிரமசிங்க, கெலினா பஸ்நாயக்க மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற சமன் சுபசிங்க, பாலித்த பண்டார, குமுது பிரியங்கிகா, நவீட் ரஹீம் ஆகியோரும் கெளரவிக்கப்பட்டனர்.
பதக்கம் வென்றவர்களைத் தவிரவும், இப்போட்டியில் பங்கேற்றிருந்த ஏனைய 16 வீர,வீராங்கனைகளும் பாராட்டப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், இலங்கை தேசிய பராலிம்பிக் குழுவின் உப தலைவர் பிரியந்த பீரிஸ் உள்ளிட்ட இலங்கை தேசிய பராலிம்பிக் குழுவின் அதிகாரிகள், MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM