பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு விடயத்தில் பெருந்தோட்டத் தொழில் அமைச்சு எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை - செந்தில் தொண்டமான்

17 Nov, 2023 | 03:41 PM
image

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு விடயத்தில் பெருந்தோட்டத் தொழில் அமைச்சு எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை என  இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் இதனை  நேற்று வியாழக்கிழமை (16) கொழும்பு சௌமியபவானில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழு சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு, தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி வருமானத்தின் அடிப்படையிலும், வாழ்க்கை செலவுப் புள்ளியின் அடிப்படையிலும் வழங்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு விடயத்தில், பெருந்தோட்ட தொழில் அமைச்சு எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை என  செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழில் அமைச்சு அலட்சிய போக்கை காட்டி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, எதிர்வரும் காலத்தில், நேரடியாக பெருந்தோட்ட முதலாளிமார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.

இதன்போது, முதலாளிமார் சம்மேளனம், இணக்கம் ஒன்றுக்கு வர மறுத்தால், காங்கிரஸ் தமது தொழிற்சங்க போராட்டங்கள் மூலம், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய வேதனத்தை பெற்றுக்கொடுக்கும் என்றும் அவர் இன்றைய செய்தியாளர்  சந்திப்பின் போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34