தென்னாபிரிக்காவை துரதிர்ஷ்டம் விட்டபாடில்லை : அவுஸ்திரேலியா 8 ஆவது தடவையாக இறுதிப் போட்டியில்

16 Nov, 2023 | 10:57 PM
image

(இந்தியாவிலிருந்து நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற மிகவும் பரபரப்பான அரை இறுதிப் போட்டியில் 3 விக்கெட்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, 8ஆவது தடவையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

ஐந்து தடவைகள் உலக சம்பியனான அவுஸ்திரேலியா, அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் வரவேற்பு நாடான இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

  மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட அதேவேளை, கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் சுமாரான மொத்த எண்ணிக்கையே பெறப்பட்டது.  

தென் ஆபிரிக்காவினால் நிர்ணியிக்கப்பட்ட 213 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 47.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இற்றைக்கு 24 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொண்டபோது அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 214 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா சகல விக்கெட்களையும் இழந்து 213 ஓட்டங்ளைப் பெற்றதால் அப் போட்டி சம நிலையில் முடிவடைந்திருந்தது.

எனினும் சுப்பர் 6 சுற்றில் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருந்ததால் தென் ஆபிரிக்கா போட்டியிலிருந்து வெளியேறியது.

இம்முறை தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி அவுஸ்திரேலியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது கடும் நெருக்கடிக்கு மத்தியில் பொறுமையைக் கடைப்பிடித்து வெற்றியையும் உலகக் கிண்ண இறுதி ஆட்ட வாய்ப்பையும் தனதாக்கிக்கொண்டது.

டேவிட் வோர்னர், ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 37 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எனினும் டேவிட் வோர்னர் (29), மிச்செல் மார்ஷ் (0) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தது அவுஸ்திரேலியாவுக்கு பேரிடியைக் கொடுத்தது.

தொடர்ந்து ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ட்ரவிஸ் ஹெட் 62 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (106 - 3 விக்.)

அதன் பின்னர் ஸ்டீவன் ஸ்மித், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 133 ஓட்டங்களாக உயர்த்தியபோது லபுஷேன் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதிரடி ஆட்ட நாயகன் க்லென் மெக்ஸ்வெல் ஒரு ஓட்டத்துடன் களம் விட்டகன்றார். (137 - 5 விக்.)

இதனைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித், ஜொஷ் இங்லிஷ் ஆகிய இருவரும் 37 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு மீளுயிர் கொடுத்தனர்.

எனினும் ஸ்டீவன் ஸ்மித் 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தவறான அடி காரணமாக ஆட்டம் இழக்க, அவுஸ்திரேலியா மீண்டும் நெருக்கடியை எதிர்கொண்டது. (174 - 6 விக்.)

ஆனால், ஜொஷ் இங்லிஸ், மிச்செல் ஸ்டார்க் ஆகிய இருவரும் பொறுமையுடன் துடுப்பெத்தாடி அணிக்கு சிறிய அளவில் உற்சாகத்தைக் கொடுத்தபோதிலும் இங்லிஸ் 28 ஓட்டங்களுடன் வெளியேற ஆட்டத்தில் மீண்டும் பரப்பரப்பு ஏற்பட்டது. (193 - 7 விக்.)

இந் நிலையில் வெற்றிக்கு தேவைப்பட்ட 20 ஓட்டங்களை  மிச்செல் ஸ்டார்க்கும் பெட் கமின்ஸும் 45 பந்துகளை பொறுமையுடன் எதிர்கொண்டு பெற்றுக்கொடுக்க, தென் ஆபிரிக்கா மீண்டும் அதிர்ஷ்டமற்ற அணியாக அரை இறுதியுடன் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது.

போட்டியின் கடைசிக் கட்டத்தில் குவின்டன் டி கொக் தவறவிட்ட பிடியும் தென் ஆபிரிக்காவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது எனலாம்.

மிச்செல் ஸ்டார்க் 16 ஓட்டங்களுடனும் பெட் கமின்ஸ் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் தப்ரெய்ஸ் ஷம்சி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெரால்ட் கோயெட்ஸீ 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

டேவிட் மில்லர் சதம் குவித்திராவிட்டால் தென் ஆபிரிக்காவின் நிலை மிகவும் மோசமாகியிருக்கும்.

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

12ஆவது ஓவரில் தென் ஆபிரிக்கா 4 விக்கெட்களை இழந்து 24 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

எனினும் ஹென்றி க்ளாசன், டேவிட் மில்லர் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 95 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

க்ளாசன் 47 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்த பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழ ஆரம்பித்தன. எனினும் டேவிட் மில்லர் மிகவும் இக்கட்டான வேளையில் தனித்து போராடி அபார சதம் குவித்து 9ஆவதாக ஆட்டம் இழந்தார்.

116 பந்துகளை எதிர்கொண்ட மில்லர் 8 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ட்ரவிஸ் ஹெட் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ட்ரவிஸ் ஹெட்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சதம் குவித்து இங்கிலாந்தை மீட்டெடுத்தார் ஜோ...

2024-02-23 22:25:16
news-image

மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று...

2024-02-23 21:56:41
news-image

பென்ஸ் - வெஸ்லி சமஅளவில் மோதல்...

2024-02-23 21:20:49
news-image

ஸாஹிரா றக்பி நூற்றாண்டு அணிக்கு எழுவர்...

2024-02-23 17:57:46
news-image

றோயல் - தோமாவின் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 22:05:50
news-image

றோயல் - தோமியன் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 00:42:42
news-image

நடுவருடன் மோதல் - வனிந்து போட்டி...

2024-02-22 15:09:19
news-image

விக்ரம் - ராஜன் - கங்கு...

2024-02-22 14:49:14
news-image

மூன்றாவது ரி20 போட்டியில் நோபோல் சர்ச்சை...

2024-02-22 13:51:18
news-image

இலங்கையை 3 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல்...

2024-02-22 00:28:59
news-image

இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான நான்காவது...

2024-02-21 16:12:47
news-image

ஸாஹிரா கால்பந்தாட்டத்திற்கு பிக்ஸ்டன் அனுசரணை

2024-02-21 14:45:53