சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொள்ளும் வகையில் வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது - காமினி லொகுகே

Published By: Vishnu

16 Nov, 2023 | 07:51 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.நிதி இல்லாமல் எவ்வாறு நிவாரணம் வழங்குவது.சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொள்ளும் வகையில் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  காமினி லொகுகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டின் தற்போதைய நிலைமையை சகலரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.கடுமையான  பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.பொருளாதார பாதிப்பில் இருந்து மீட்சியடைய வேண்டுமாயின் கசப்பான மருந்தை அனைவரும் பருக வேண்டும்.

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக எவருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.நிதி இல்லாமல் எவ்வாறு நிவாரணம் வழங்குவது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் சகலருக்கும் நிவாரணம் வழங்குவது சாத்தியமற்றது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவு  செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் சிறந்தவையாக காணப்படுகின்றன.சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் தான் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சகல தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும்...

2026-05-13 02:22:17
news-image

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சுயாதீனம் பாதுகாக்கப்பட...

2026-05-13 02:01:04
news-image

புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை...

2026-05-13 01:37:26
news-image

ஜனாதிபதியின் கருத்து நீதித்துறை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்?...

2026-05-12 16:03:13
news-image

உயர்கல்வி வாய்ப்பை வெறும் நிதி உதவியாக...

2026-05-12 16:59:29
news-image

நிதியத்துக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான...

2026-05-12 16:54:14
news-image

மகிழ்ச்சிக்குப் பதிலாக துயரத்தை விதைக்கும் மக்கள்...

2026-05-12 17:30:10
news-image

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் 600 மில்லியன்...

2026-05-12 17:47:24
news-image

எந்தவொரு அரசாங்கமும் தங்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது...

2026-05-12 17:37:46
news-image

போக்குவரத்து பொலிஸாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதிப்...

2026-05-12 20:40:47
news-image

மே மாதத்தின் முதல் 10 நாட்களில்...

2026-05-12 19:24:52
news-image

காலி துப்பாக்கிச் சூடு : சந்தேக...

2026-05-12 19:05:47