படைப்பாற்றல், புத்தாக்கம், ஒன்றுபட்ட உழைப்பைக் காண்பிக்கும் Design Code நிகழ்வு

16 Nov, 2023 | 06:21 PM
image

ருடாந்த வடிவமைப்புக் காட்சி நிகழ்வான “Design Code” எதிர்வரும் நவம்பர் 23 முதல் 26 வரை இடம்பெறவுள்ளதை மொரட்டுவை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை பீடத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, நான்கு தினங்கள் கொண்ட விமரிசையான Design Code நிகழ்வு தொடர்பில் கடந்த 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை Trace Expert Cityஇல் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்ட தொழில்துறை வல்லுநர்கள், பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிப்பதில் வடிவமைப்பின் முக்கியமான வகிபாகத்தை சுட்டிக்காட்டினர். 

குறிப்பாக, வடிவமைப்புப் புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமான ஸ்தானத்தை நிலைநிறுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்படுகின்ற Design Code போன்ற முயற்சிகளை அவர்கள் வெகுவாக பாராட்டினர். 

மாற்றத்துக்கான ஒரு சக்தியாக வடிவமைப்பு புத்தாக்கத்தின் சர்வதேச தேவைப்பாட்டை இது அடிகோடிட்டுக் காட்டுவதுடன், வளர்ச்சிக்கான புதிய மார்க்கங்களை வெளிக்கொண்டு வருவதில் ஒரு முக்கியமான கருவியாக அமைந்து, சவால்களிலிருந்து இலங்கை வெளிவருவதற்கு வழிகாட்டும் வகையில் படைப்பாற்றல் மற்றும் முன்னோக்குடனான சிந்தனையின் மூலோபாய ரீதியான பயன்பாட்டை நிகழ்வில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் வலியுறுத்தின.

Design Code நிகழ்வு மற்றும் Integrated Design Research (IDR) ஆகியவற்றின் தலைவரான கலாநிதி சுமந்ரி சமரவிக்கிரம இம்மாநாட்டில் கருத்து வெளியிடுகையில்,

“2023ஆம் ஆண்டுக்கான 'Design Code' நிகழ்வின் ஆரம்பம் தொடர்பில் அறிவிப்பதில் நாம் மிக்க மகிழ்ச்சி அடைவதுடன், IDRஉடனான ஒத்துழைப்பு எமது பயணத்தில் முக்கியமான ஒரு சாதனை இலக்காக மாறியுள்ளது.

மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் என இரு தரப்பினருக்கும் கிடைக்கும் வாய்ப்புக்களுக்கு வழிகாட்டி, ஆசியாவில் வடிவமைப்பின் குரலாக எமது ஸ்தானத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம். 

இந்நிகழ்வில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், புகழ்பெற்ற சர்வதேச பேச்சாளர்களை இடம்பெறச் செய்து, வளர்ந்து வருகின்ற வடிவமைப்புப் போக்குகளை உள்ளடக்கும் வகையில் 'Design Code' நிகழ்வை விஸ்தரிக்கும் பயணத்தையும் நாம் ஆரம்பித்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

2017ஆம் ஆண்டு இது அறிமுகமானதிலிருந்து படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்தின் தனித்துவமான முத்திரையாக "Design Code" நிகழ்வு வளர்ச்சி கண்டுள்ளதுடன், ஒருங்கிணைந்த வடிவமைப்புத்துறை சார் மாணவர்களின் மெச்சத்தக்க திறமைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் ஒரு வலுவான மேடையாகவும் மாறியுள்ளது.

இடமிருந்து வலமாக அமர்ந்திருப்பவர்கள்: திரு. நேமந்த அபேசிங்க (பொது முகாமையாளர் - நிப்பொன் பெயிண்ட் லங்கா (பிரைவேட்) லிமிட்டெட்), கலாநிதி சுமந்திரி சமரவிக்ரம (நிகழ்வுத் தலைவர் Design Code மற்றும் IDR தலைவர், ஒருங்கிணைந்த வடிவமைப்புத் துறை - மொரட்டுவை பல்கலைக்கழகம்) மெலனி திசாநாயக்க (தலைவர் - ஒருங்கிணைந்த வடிவமைப்புத்துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம்), திரு. ஜேம்ஸ் போல்மண்ட் (படைப்பாக்க பணிப்பாளர் - போல்மண்ட் ஸ்டுடி)

இந்த ஆண்டில் வடிவமைப்பு ஆராய்ச்சி பீடத்தின் அங்கமான IDRஉடன் (Integrated Design Research) ஒத்துழைத்துச் செயல்படுகின்ற வியப்பூட்டும் புதிய பரிமாணங்களுக்கு வித்திட்டுள்ளதுடன் வடிவமைப்பு ஆராய்ச்சி, கல்வி மற்றும் நடைமுறைப் பிரயோகம் ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பினை வளர்க்கின்ற ஒரு இடைநிலை மேடையாக இந்த மாற்றத்துக்கான பயணம் அமையவுள்ளது.

கைத்தொழில் அமைச்சு - ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் இலங்கை தேயிலை சபை ஆகியன இந்நிகழ்வுக்கு ஆதரவளிப்பதுடன், National Institute of Design in Ahmedabad (இந்தியா), Google (அமெரிக்கா), Ford Motor Company (அமெரிக்கா) ஆகியவற்றிலிருந்து பேச்சாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

Nippon Paint Lanka, Puwakaramba Enterprises Private Limited, Global Vinyl, Dream Factory Private Limited, MullenLowe, Panther Graphics, Print Care Solutions மற்றும் ஏனைய பல்வேறு வர்த்தக கூட்டாளர்களும் இந்நிகழ்வுடன் கைகோர்த்துள்ளன.

ஒருங்கிணைந்த வடிவமைப்பு ஆராய்ச்சி மாநாடு (நவ. 23-25), செயலமர்வுகள் (நவ. 25-26),  Fashion Alley (நவ. 24), LearnX Challenge (நவ. 25), ஏற்றுமதிகளுக்கான பொதியிடல் வடிவமைப்பு (நவ. 25), Space Concave (நவ. 26), Designer Gallery (நவ. 25-26) மற்றும் Design Thinker Workshop (நவ. 26) அடங்கலாக அனைவரையும் ஈர்க்கின்ற பல்வேறு நிகழ்வுகளை Design Code வழங்குகிறது. 

"Design Code" பட்டமளிப்பு நிகழ்வு சாதாரணமான ஒன்றல்ல. இது வடிவமைப்பு உலகின் படைப்பாற்றல், புத்தாக்கம் மற்றும் எல்லையற்ற சாத்தியங்களின் கொண்டாட்டம். எதிர்வரும் நவம்பர் 23 முதல் 26 வரை இடம்பெறும் இந்த தனித்துவமான கொண்டாட்டத்தில் இணைந்து, வடிவமைப்பின் எதிர்காலத்தை நேரில் கண்டுகொள்ளுமாறு வடிவமைப்பு ஆர்வலர்கள், தொழில்துறை வல்லுநர்கள், பட்டதாரி மாணவர்கள் மற்றும் மேற்பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மொரட்டுவை பல்கலைக்கழகம் அழைப்பு விடுக்கிறது.

வடிவமைப்பின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் ஆற்றல்மிக்க நிகழ்வில் நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.

இதற்கான பதிவை மேற்கொள்ளவும், மேலதிக தகவல் விபரங்களை அறிந்துகொள்ளவும், www.idresearch.uom.lk என்ற இணைய இணைப்பினை தயவு செய்து பார்வையிடவும். (+94) 77 348 7276 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக Design Conference அணியை நீங்கள் தொடர்புகொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024 ‘ஹஜ் - உம்றா’ பயணத்தில்...

2024-09-12 19:54:27
news-image

இலங்கையில் குடியிராத வெளிநாட்டு தனிநபர்களுக்கு உள்வாரி...

2024-09-12 13:02:54
news-image

தனியார் துறையில் புத்தாக்க நிதியளித்தல் தீர்வுகள்...

2024-09-12 13:21:44
news-image

மாற்று முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்த மட்டக்களப்பில்...

2024-09-12 13:15:45
news-image

குளியாப்பிட்டியாவில் வாகன பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்களை...

2024-09-11 17:16:20
news-image

சவாலான கால நிலைகளிலிருந்து உங்கள் வீட்டை...

2024-09-10 15:55:46
news-image

3 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் பதிவுகளுடன்...

2024-09-10 12:23:12
news-image

சுவாச ஆரோக்கியத்திற்கான NIHR குளோபல் ஹெல்த்...

2024-09-09 20:40:22
news-image

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க ரணில் வில்லத்தரகே...

2024-09-09 19:39:28
news-image

50 ஆண்டுகளை நிறைவு செய்யும் எய்ட்கன்...

2024-09-09 10:20:01
news-image

தாய்லாந்தில் இடம்பெற்ற 13ஆவது HAPEX மற்றும்...

2024-09-09 09:30:01
news-image

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் அறிமுகமாகவுள்ள எல்.டி.எல் Holdings...

2024-09-06 16:41:54