சூர்யா அப்படி... விஜய் இப்படி...!

16 Nov, 2023 | 06:04 PM
image

சுமார் ஆறு வருட தாமதத்துக்குப் பின், எதிர்வரும் 24ஆம் திகதி திரைக்கு வரவிருக்கிறது கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

ஆரம்பத்தில் துருவ நட்சத்திரத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாகவே இருந்தது. என்றபோதும் அது நடக்கவில்லை. அதுபற்றி, ஊடகம் ஒன்றுக்கு விரிவாக விளக்கமளித்திருக்கிறார்.

“துருவ நட்சத்திரத்தின் கதைப்படி, மும்பை தாக்குதலுக்குப் பின், அரசாங்க அதிகாரி ஒருவரின் தூண்டுதலின் பேரில், பத்துப் பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்படுகிறது. அதற்கு ஒருவர் தலைமை தாங்குகிறார். இந்த நிலையில், அந்தக் குழுவுக்கு ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்படி விடுபடுகின்றனர் என்பதுதான் படத்தின் கதை.

“இந்தக் கதையை மேலோட்டமாகக் கூறியபோது சூர்யா ஏற்றுக்கொண்டாலும் இது நடைமுறைச் சாத்தியமானதுதானா என்ற கேள்வி அவருக்குள் இருந்து வந்தது. அதன்படி, எனது திரைக்கதையும் சற்றுத் தாமதமாகவே சூர்யா படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

“தற்செயலாக விக்ரமிடம் இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, அதில் நடிக்க அவர் விருப்பம் தெரிவித்தார். அப்படித்தான் துருவ நட்சத்திரம் உருவானது” என்று மனந்திறந்திருக்கிறார் கௌதம்.

மேலும் தளபதி விஜய்யை வைத்து இயக்கவிருந்த ‘யோஹன்: அத்தியாயம் ஒன்று’ படம் பற்றியும் கௌதம் கூறியிருக்கிறார்.

“ஜேம்ஸ் பொண்ட் பாணியிலான இந்தக் கதையில், உலகுக்கே தலைவலியாக இருக்கும் மாபெரும் ஆயுத வியாபாரி ஒருவரை முடக்கும் தனி நாயகனாக விஜய்க்கு கதாபாத்திரம் வடித்திருந்தேன். அவருக்குக் கதை பிடித்திருந்தாலும் அதீத ஆங்கில சினிமா பாணி தனக்கு ஒத்துவருமோ என்ற தயக்கத்திலேயே அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார்” என்றும் கௌதம் கூறியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்