கேகாலை, தெஹியோவிட்ட பிரதேசத்தில் தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன், கனடிய தமிழர் பேரவையின் இலங்கைக்கான மனிதாபிமான திட்டங்களின் இணைப்பாளர் துசியந்தன் துரைரட்ணம் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய துசியந்தன் துரைரட்ணம், இந்த பணிக்காக நன்கொடை வழங்கி உதவிய அனைத்து கனடியர்கள் மற்றும் அமெரிக்க தமிழர்களுக்கும் கனடிய தமிழர் பேரவையின் சார்பாக மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டடத்தின் முதலாவது தள நிர்மாணத்துக்கு தேவையான நிதியினை திரட்டும் விதமாக கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதி கனடிய தமிழர் பேரவையினால் நிதிசேர் நடைபயணம் நிகழ்த்தப்பட்டது.
தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயமானது மண்சரிவு காரணமாக 2016ஆம் ஆண்டு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அந்தப் பாடசாலையில் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அபாயகரமான சூழ்நிலை காணப்பட்டது.
இதனால் பாடசாலை தொடர்ந்து அதே இடத்தில் இயங்குவது பாதுகாப்பானதல்ல என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன் பின்னர், இலங்கை அரசாங்கத்தால் குறித்த பாடசாலையின் அமைவிடத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் பாதுகாப்பான நிலம் வழங்கப்பட்டிருந்தது.
மேற்படி திட்டத்துக்கான மொத்த செலவு கனடிய டொலர் $100,000க்கும் அதிகமாகும்.
அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம், தளபாடங்கள், ஆய்வுகூட உபகரணங்கள் என அனைத்தும் அதனுள் அடங்கும். அத்துடன் இந்த கட்டட நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2024 பெப்ரவரியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 05 தொடக்கம் தரம் 13 வரையிலான வகுப்புகள் இருப்பதோடு, 600க்கு மேற்பட்ட மாணவர்கள் கற்று வருகிறார்கள்.
உயர்தரத்தில் கலைப்பிரிவை மாத்திரம் கொண்டிருக்கும் இந்த பாடசாலையில் உயர்தர விஞ்ஞான ஆய்வுக்கூடம் இல்லாத காரணத்தால் விஞ்ஞான பாடத்தை தெரிவுசெய்ய விரும்பும் மாணவர்கள் ஒன்றில் கலைப்பிரிவை தெரிவுசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அல்லது தமது வசிப்பிடங்களில் இருந்து வெளியிடங்களுக்கு சென்று, தாம் விரும்பும் விஞ்ஞான பிரிவில் கற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இந்நிலையை கருத்தில் கொண்டே கனடிய தமிழர் பேரவை இத்திட்டத்தை அமுல்படுத்தியிருக்கிறது.
பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்ட தமிழர்கள் மலையகத்தில் குடியேறி இந்த 2023உடன் 200 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்னமும் பல்வேறுபட்ட அடிப்படை பிரச்சினைகளுடனேயே அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், அந்த மலையக பிள்ளைகளின் எதிர்காலத்தை மாற்றுவதற்கு கல்வியே இன்றியமையாத தேவை என்பதாலும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் அறிவுரைக்கமைய, கனடிய தமிழர் பேரவையினரின் இவ்வாண்டுக்கான நிதிசேர் நடை பயணம் “மலையக தமிழர்களின் கல்விக்காக” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM