வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் மகளிர் அபிவிருத்தி நிலையங்களில் மனைப் பொருளியலில் டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்து, ஆடை வடிவமைப்பில் தேசிய தொழில் தகைமையை பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (16) நடைபெற்றது.
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் பொன் விழா மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது.
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் த.சசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
வடக்கு மாகாணத்தில் 302 பேருக்கு இதன்போது சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM