லுணுகலை பகுதியில் ஆணொருவனின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 3

16 Nov, 2023 | 02:26 PM
image

லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொப்டன் சுவிண்டன் பகுதியில் தோட்ட விடுதியொன்றில் இருந்து 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் சுவிண்டன் தோட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றுபவர் என்பதுடன் கடமை நேரத்தில் தான் விடுதிக்கு சென்று வருவதாக தொழிலாளர்களிடம் கூறிவிட்டு விடுதிக்கு சென்றுள்ளார்.

இருப்பினும் மிக நீண்ட நேரமாகியும் அவர் வராததால் தொழிலாளர்கள் தோட்ட விடுதிக்கு சென்று பார்த்த போது அவர் விடுதியில் உள்ள கட்டில் ஒன்றில் இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

லுணுகலை பொலிஸார் சடலத்தினை வந்து பார்வையிட்டதன் பின்னர் நீதவான் பார்வையிடுவதற்காக சடலம் குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சட்ட வைத்திய பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட உள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவுக்கான இராஜதந்திர பயணத்தில் பல்வேறு வெற்றி...

2025-03-15 18:17:43
news-image

ரணில் - சஜித் இணையும் வரை...

2025-03-15 18:58:16
news-image

இன்றைய வானிலை

2025-03-16 06:32:14
news-image

படையினரால் வன்கொடுமைக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி...

2025-03-15 18:19:12
news-image

இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் முதல்...

2025-03-15 17:14:14
news-image

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?...

2025-03-15 18:57:17
news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26