நோபல் உலக சாதனை கவிதைத் தொகுப்பு நூலான "கவித்தேனருவி" எனும் நூலில் இடம்பெற்ற தனது நூறு கவிதைகளால் அரநாயக்க கவிதாயினி நதீரா வசூக் சாதனை படைத்துள்ளார்.
தமிழ்த் தொண்டன் பைந்தமிழ்ச் சங்கமும் நிலாவட்ட இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய பத்தாயிரம் கவிதைகள் நோபல் உலக சாதனைத் தொகுப்பு நூலான "கவித்தேனருவி" எனும் கவிதைத் தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா தொகுப்பாசிரியர் கவிஞர் என். சாகிர் உஷேன் தலைமையில் வடசென்னையில் உள்ள எருக்கஞ்சேரி வீ.ஆர்.எம். மஹாலில் கடந்த 5ஆம் திகதி நடைபெற்றது.
இந்நூலில் நூறு கவிஞர்களின் சிறப்பான நூறு கவிதைகள் வீதம் தொகுத்து உருவாக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
"கவித்தேனருவி" நூலில் இலங்கையில் வாழும் அரநாயக்க, தல்கஸ்பிடியைச் சேர்ந்த ஆசிரியையும் கவிதாயினியும் எழுத்தாளருமான நதீரா வசூக் எழுதிய "விடியலைத் தேடும் விழிகள்" என்ற தலைப்பில் சிறப்பான நூறு கவிதைகளும் இடம்பெற்று, நோபல் உலக சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM