பின்வத்தையில் நேற்று புதன்கிழமை (15) இரவு ஆட்டோவில் பயணித்த மூவர் சாரதியை கத்தியால் குத்தி முச்சக்கரவண்டியை கடத்திச் சென்றுள்ளதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த முச்சக்கரவண்டியில் வாலியதல்பிட்டிய பிரதேசத்திற்கு ஒருவர் வாடகைக்கு செல்வதாக கூறி அதில் பயணித்துள்ள நிலையில் மேலும் இனந்தெரியாத இருவர் முச்சக்கரவண்டியில் ஏறியுள்ளனர்.
பின்னர் இவர்கள் மூவரும் பின்வத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டி சாரதியை இறங்குமாறு வற்புறுத்திய நிலையில் சந்தேக நபர்களில் ஒருவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாரதியின் வயிற்றிலும் மார்பிலும் குத்தி காயப்படுத்தி விட்டு முச்சக்கரவண்டியை கடத்தி சென்றுள்ளனர்.
காயமடைந்த சாரதி பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியின் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM