பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் அனைத்து வகையான கிரிக்கெட் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
2023 ஆண்டுக்கான தற்போது இடம்பெற்றுவரும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடிய 9 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றிபெற்ற போதும் அரையிறுதிக்கு விளையாடத் தகுதிபெறவில்லை.
இந்நிலையில், அணித்தலைவராக செயற்பட்ட பாபர் அஸாம் அனைத்து வகையான போட்டிகளில் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பாபர் அஸாம் கடந்த 2020 ஆண்டு முதல் பாகிஸ்தான் அணியின் தலைவராக செயற்பட்டு வருகிறார்.
தனது பதவி விலகல் குறித்து பாபர் அஸாம கூறுகையில்,
"நான் இன்றிலிருந்து அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானின் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். இது ஒரு கடினமான முடிவு, ஆனால் இந்த முடிவுக்கு இது சரியான நேரம் என்று நான் நினைக்கின்றேன். மூன்று வடிவங்களிலும் ஒரு வீரராக பாகிஸ்தாள் அணியை தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்துவேன். எனது அனுபவம் மற்றும் அர்ப்பணிப்புடன் புதிய அணித் தலைவருக்கும் அணிக்கும் ஆதரவளிப்பேன். அணிக்கான தலைமைப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM