திரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த கேஆர் விஜயா!

15 Nov, 2023 | 09:51 PM
image

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற நடிகையான "புன்னகை அரசி" என அழைக்கப்படும் கே. ஆர். விஜயா அறிமுகமாகி இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவாகியுள்ளன.

தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகையான இவர் , தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவர் ‘தெய்வநாயகி’ என்னும் இயற்பெயர் உடன் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் ராமச்சந்திர ராவ் என்பவருக்கும், மங்களத்திற்கும் மகளாகப் பிறந்தார்.

நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய கேஆர் விஜயா, 1963ம் ஆண்டு நவம்பர் 15ம் திகதி வெளிவந்த 'கற்பகம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ‘கந்தன் கருணை’, ‘சரஸ்வதி சபதம்’, ‘இதயக்கமலம்’, ‘நம்ம வீட்டு தெய்வம்’, ‘தங்கப்பதக்கம்’, ‘திரிசூலம்’, ‘கல்தூண்’, ‘மிருதங்க சக்ரவர்த்தி’, ‘வாயாடி’, ‘திருடி’, ‘ரோஷக்காரி’, ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘கந்தன் கருணை’ போன்ற படங்கள் அவரது நடிப்பில் முத்திரைப் பதித்த திரைபடங்களாகும்.

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என்னும் இரண்டு ஜாம்பவான்களுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'இயக்குநர் திலகம்' கே. பாக்யராஜ் வெளியிட்ட...

2024-09-20 02:52:11
news-image

சூர்யாவின் 'கங்குவா' திரைப்படத்தின் புதிய வெளியீட்டு...

2024-09-20 02:36:23
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி -...

2024-09-20 02:25:54
news-image

படக் குழுவினருக்கு கேடயம் வழங்கி கௌரவித்த...

2024-09-20 02:15:56
news-image

நடிகர் ஷேன் நிஹாம் நடிக்கும் '...

2024-09-20 02:10:36
news-image

ஒரு திரைப்படம் உருவாவதற்கு முதலில் என்ன...

2024-09-20 02:08:02
news-image

தண்ணீரின் பிரம்மாண்டத்தை கடத்தும் படைப்பாக உருவாகி...

2024-09-19 20:43:39
news-image

பழம்பெரும் இந்திய திரைப்பட நடிகை சிஐடி...

2024-09-18 15:28:17
news-image

நயன்தாரா - சுந்தர். சி கூட்டணியில்...

2024-09-17 15:35:04
news-image

இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய்...

2024-09-17 15:20:48
news-image

சத்யராஜ் நடிக்கும் 'ஜீப்ரா' படத்தின் மோஷன்...

2024-09-17 15:20:18
news-image

பெண்களின் பாரம்பரிய ஆடையை பற்றி பேசும்...

2024-09-17 13:59:28