குளிர்காலத்தில் பல பெரியவர்களுக்கும் வயதானவர்களுக்கும் பல்வேறு உடல் தொந்தரவுகள் வரலாம். ஆனால், குழந்தைகளுக்கும் கூட குறிப்பிட்ட சில உடல் உபாதைகள் ஏற்படலாம். அவற்றில் முக்கியமானது, தலைசுற்றல் அல்லது குமட்டல், வாந்தி.
குளிர்காலங்களில் காற்றில் எப்போதும் ஒரு ஈரத்தன்மை இருந்துகொண்டே இருக்கும். காதுகள் திறந்திருப்பதால், அதன்வழியாக ஈரத்தன்மை நிறைந்த காற்று புகுந்துவிடுகிறது. காற்று மட்டும் காதினுள் போவதில்லை. கூடவே, கிருமியையும் எடுத்துச் சென்றுவிடுகிறது. இதனால், காதினுள் தொற்று ஏற்படுகிறது.
உடலின் சமநிலையைப் பேணுவதில் காதுகளின் அவசியம் இன்றியமையாதது. ஆனால், குளிர்காலத்தில் இவ்வாறு ஏற்படும் நோய்த்தொற்றினால், காதின் நடுநிலைமை பாதிக்கப்பட்டுவிடும். இதனால்தான் சிறுவர்களும் தலைசுற்றல், வாந்தி, குமட்டல் என்று தொந்தரவுகளுக்கு உள்ளாகிறார்கள்.
இதற்கு எளிய தீர்வுகளே போதுமானது. வீட்டை விட்டு வெளியே செல்லும் குழந்தைகளுக்கு காதை மூடி மறைப்பது போன்ற தொப்பியையோ, அல்லது காதில் கொஞ்சம் பஞ்சை வைத்து அடைத்தோ அனுப்பிவிடலாம். மேலும், குளிர்காலத்தில் சற்றே சூடான நீரைப் பருக வைப்பதும் அருமருந்தாகும்.
மேலும், தயிர், பழங்கள் போன்ற குளிர்ந்த உணவுகளை குளிர்காலத்தில் தவிர்ப்பதைப் பழக்கிக்கொண்டால், இந்தத் தொந்தரவுகளையும் தவிர்த்து விட முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM