பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் ஃபாரூக் பர்கி நவம்பர் 5 முதல் 8 வரை கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு, பல்வேறு இராணுவ, அரசியல் மற்றும் சமூக நலன் சார்ந்த பிரமுகர்களை சந்தித்தார்.
அத்துடன், அவர் பொத்துவில் மற்றும் ஒலுவில் பிரதேச வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பைகளையும் பாடசாலைகளுக்கு தளபாடங்களையும் வழங்கி வைத்தார்.
மதம், பாலினம் மற்றும் இனம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் சமூக நலன், நட்பு மற்றும் இலங்கை சமூகத்துக்கான ஆதரவுக்கான பாகிஸ்தானின் அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது.
மற்றுமொரு நிகழ்வில் உயர்ஸ்தானிகர் கல்முனைக்குடி பிரதேசத்தில் உள்ள விதவைகள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார்.
இதன்போது, கிழக்கு மாகாண மக்களின் அமோக வரவேற்புக்கு உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்ததோடு, இலங்கை மக்களின் நலனுக்காக பாகிஸ்தான் எப்போதும் ஆதரவாக நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுற்றுலா, உள்ளூர் சிறு வணிகம், ஹோட்டல் துறை, கடல் அலைச்சறுக்கு போன்ற துறைகளில் கிழக்கு மாகாணத்தில் பாரிய வாய்ப்புகள் நிறைந்துள்ளதாக உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தானும் இலங்கையும் ஒன்றிணைந்து பரஸ்பர இருதரப்பு ஆர்வமுள்ள பல துறைகளில் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, உயர்ஸ்தானிகர் பானமவில் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியையும், திருகோணமலையில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியையும் சந்தித்தார்.
இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்த பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸாரப் மற்றும் ரஹ்மத் அறக்கட்டளையின் தலைவர் அப்துல் ரகுமான் மன்சூர் ஆகியோர் உயர்ஸ்தானிகரின் இந்த நிகழ்வுகளுக்கு தேவையான ஒருங்கிணைப்புகளை செய்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM