தான் பயணித்த பேருந்திலேயே மோதி பெண் மரணம் : பண்டாரவளையில் சம்பவம்

15 Nov, 2023 | 05:40 PM
image

பண்டாரவளை பிரதேசத்தில் பெண் ஒருவர் பஸ்ஸில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்படும் போது அவர் பயணித்த பஸ்ஸினாலேயே மோதப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று புதன்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மகுல் எல்ல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய பெண் ஆவார்.

இவர் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் பயணித்த நிலையில் பஸ்ஸில் இருந்து இறங்கி குறித்த பஸ்ஸிற்கு முன்பாக வீதியை கடக்க முற்படும் போது அவர் பயணித்த பஸ்ஸினாலயே மோதப்பட்டு காயமடைந்துள்ளார்.

பின்னர் இவர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பஸ்ஸை செலுத்தியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது...

2024-06-16 10:14:14
news-image

ரணில் - சஜித் இணைப்பு முயற்சி...

2024-06-16 09:56:40
news-image

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை :...

2024-06-16 09:34:17
news-image

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்...

2024-06-16 07:26:46
news-image

இன்றைய வானிலை

2024-06-16 06:08:16
news-image

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும்...

2024-06-15 21:27:49
news-image

சாதகமான பதிலின்றேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்...

2024-06-15 21:22:14
news-image

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ...

2024-06-15 21:25:54
news-image

பாணமை கடலில் தவறி விழுந்து வைத்தியர்...

2024-06-15 21:48:25
news-image

பெண் ஊழியரின் துரித நடவடிக்கையால் பாரிய...

2024-06-15 21:49:57
news-image

யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைப்பதற்கு...

2024-06-15 21:24:21
news-image

4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்...

2024-06-15 21:27:01