எஸ்.ஜே. சூர்யாவின் அபார நடிப்பை வியந்து பாராட்டிய ரஜினிகாந்த்!

15 Nov, 2023 | 05:38 PM
image

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் எஸ்ஜே சூர்யாவின் அபார நடிப்பை வியந்து ரஜினிகாந்த் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்திற்கு அபார வரவேற்பு கிடைத்துள்ளது. சினிமாவில் நடிக்க ஆசைப்படும் கேங்க்ஸ்டர் சீசரும் (ராகவா லாரன்ஸ்) இயக்குநராக அறிமுகமாகும் கிருபாவும் (எஸ்.ஜே.சூர்யா) எதிர்கொள்ளும் பிரச்னைகளாக கதைக்களம்  உருவாகியிருக்கிறது.

தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் நேற்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு. லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா? என பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார்.” என பாராட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து, “மிகச் சிறந்த பாராட்டைத் தந்த ரஜினிக்கு நன்றி. உங்கள் அன்பில், மழையில் நானும் குழுவினரும் நனைந்துவிட்டோம்,” என்று சூர்யா நேற்றே பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா இன்று இதுகுறித்து தன் "X" பக்கத்தில், “தலைவருடனான குறிஞ்சி தருணம். உங்கள் அன்பான கடிதத்தால் நாங்கள் நெகிழ்ச்சியானோம். மிக்க நன்றி சார்” எனப் மீண்டும் நன்றியைத் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்த ஜிகர்தண்டா படக்குழுவினர் அவரிடம் வாழ்த்துகளைப் பெற்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்