உயிரிழந்த தந்தையின் மரணச் சான்றிதழை பெறச்சென்ற மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்!

Published By: Digital Desk 3

15 Nov, 2023 | 12:05 PM
image

இறுதிக் கிரியைகளுக்காக உயிரிழந்த தனது  தந்தையின் மரணச் சான்றிதழை உரிய அதிகாரியிடம் பெற்றுக் கொள்ளச் சென்று கொண்டிருந்த மகன்   புளத்சிங்கல பஹல நாரகல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் சென்ற ரந்திக பியூமல் கமகே என்ற (21) வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தனது தந்தையின் மரணச் சான்றிதழை அவசர, அவசரமாக  பெற்றுக் கொள்வதற்காக புலத்சிங்களவிலிருந்து ஹொரணைக்கு பயணித்துள்ளார்.

இவ்வாறு பயணித்த போது  பள்ளத்தாக்கு ஒன்றுக்கு  அருகில் உள்ள வளைவில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரும்  காயமடைந்து ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும்...

2025-12-07 09:22:27
news-image

70 பில்லியன் ரூபா வெள்ள நிவாரண...

2025-12-07 08:31:11
news-image

950 மெட்ரிக் தொன் அவசர உதவி...

2025-12-07 08:31:22
news-image

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3...

2025-12-07 08:14:50
news-image

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்...

2025-12-07 07:58:05
news-image

பாறை துளையிடும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர்...

2025-12-07 07:56:58
news-image

இன்றைய வானிலை

2025-12-07 06:22:23
news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55
news-image

அஸ்கிரிய மகாநாயக் தேரரை சந்தித்தார் ஜனாதிபதி...

2025-12-06 21:26:52
news-image

மாத்தளையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்...

2025-12-06 20:56:24