ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக 2.6 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள உள்ளுர் வீரர் மொஹமட் சிராஜின் உருக்கமான பேச்சு கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல்.  வீரர்கள் ஏலம் நடைபெற்றது.

இதன்போது இந்தியாவின் ஹைதராபாத்தில் வசிக்கும் 22 வயதான உள்ளுர் வீரர் மொஹமட் சிவாஜ் 2.6 கோடிக்கு ஹைதராபாத் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“எதாவது ஒரு அணிக்காக நான் வாங்கப்படுவேன் எனக்கு தெரியும், எனினும் நான் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்படுவேன் என கனவிலும் நினைக்கவில்லை. நான் கிரிக்கெட் போட்டியொன்றில் முதன்முறையாக 500 ரூபா சம்பளமாக பெற்றேன். எனது மகிழ்ச்சியை எவ்வாறு வெளிப்படுத்துவேன் என தெரியவில்லை”.

எனது தந்தையொரு முச்சக்கரவண்டி சாரதி , எங்களுக்கு சொந்த வீடென்று ஒன்றுமில்லை, நாங்கள் வாடகை வீட்டில்தான் வசித்துவருகின்றோம், எனது பணத்தில் முதல் முதலாக நல்ல வீடொன்று வாங்க வேண்டும், எனது அப்பாவை இனி முச்சக்கரவண்டி செலுத்த வேண்டாம் என கூறியுள்ளேன் அவர் அதை கேட்பதாக இல்லை. எனினும் நான் அவருக்கு கூறி புரியவைத்துவிடுவேன், நான் விளையாடும் போது எனக்கு தேவையான அனைத்தையும் அவர் தயங்காமல் வாங்கித்தருவார்”. என உருக்கமாக கூறியுள்ளார்.

மொஹமட் சிவாஜ் உள்ளுர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.