நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று புதன்கிழமை (15) முதல் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகி இருப்பதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ரொஷான் குமார, தமது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகள் தீர்வு வழங்க தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
களப் பணிகளுக்காக வழங்கப்படும் தூரத்துக்கான கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளை அதிகரிக்கத் தவறியமை முக்கிய காரணங்களில் சில என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்போது வழங்கப்படும் கொடுப்பனவு வாழ்க்கைச் செலவு, எரிபொருள் விலைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றுடன் ஒத்துப் போகவில்லை, இது பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM