யானையொன்றை கொலைசெய்து அதன் தலை மற்றும் தும்பிக்கையை துண்டுதுண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இவ்வாறு தும்பிக்கை அகற்றப்பட்ட யானையின் தலை வெல்லவாய – தெல்லுல்ல பகுதியில் உள்ள கிரிந்திஓயாவில் வீசப்பட்டுள்ளது.
யானையொன்றை கொலைசெய்து துண்டு துண்டாக வெட்டி, கிரிந்திஓயாவில் வீசியுள்ள நிலையில், யானையின் தலை மாத்திரம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யானையின் தலையுடன் ஒரு காது மாத்திரம் காணப்படுகின்றது. மற்றைய காது துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த யானை வேறொரு பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு, துண்டுதுண்டுகளாக வெட்டப்பட்டு கிரிந்திஓயாவில் போடப்பட்டிருக்கலாமென பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.
இதுவரை யானையின் தும்பிக்கை துண்டிக்கப்பட்ட தலை மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் யானையின் எஞ்சிய பாகங்களை கண்டுபிடிக்க வெல்லவாய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM