மூல நட்சத்திரக்காரர்களின் சிரமங்கள் நீங்க எளிய பரிகாரம்

14 Nov, 2023 | 05:11 PM
image

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை சற்று சிரம தசை உடையதாக இருப்பது பொதுவானது. அதற்காக மூல நட்சத்திரம் தீங்கானது என்ற சொல்வதற்கில்லை. கஷ்டங்களைத் தாங்கும் மன வலிமை உடையவர்கள் மூல நட்சத்திரக்காரர்களாக இருப்பார்கள்.

மூல நட்சத்திரக்காரர்களுக்கு சுப விடயங்கள் நடப்பதில் கொஞ்சம் இழுபறி, தாமதம் என்பன ஏற்பட்டாலும் மிகச் சிறந்தவையாகவே அந்த விடயங்கள் நடந்தேறும்.

இவ்வளவு சிரமங்களுடன்‌ இந்த நட்சத்திரத்தில்‌ பிறந்தவர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கான அருமையான பரிகாரங்களை, சித்தர் பெருமக்கள் தந்திருக்கிறார்கள். ஆனால், இது குழந்தை பிறந்த சில நாட்களுக்குள் செய்ய வேண்டியது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

கடல் மண்‌, நதி‌, ஏரி அல்லது குளங்களில்‌ உள்ள மண்‌, நண்டு வளையில்‌ உள்ள மண்‌, புற்று மண்‌, பசுவின்‌ குளம்பு மண்,‌ மரங்களின்‌ கீழ்‌ உள்ள மண்‌, யானையின்‌ தந்தம்‌ அல்லது யானையின்‌ காலடியின்‌ கீழே உள்ள மண்‌ என ஏழு விதமான மண்களையும்‌ எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு வெண்கலக் குடத்தையும் எடுத்து, அதில்‌ 100 துவாரங்கள்‌ போட்டு அதன்‌ உள்ளே இந்த மண்‌ அனைத்தையும்‌ ஒரு பாத்திரத்தில்‌ கலக்கி அந்த துவாரம்‌ உள்ள வெண்கலக் குடத்தின்‌ வழியே ஊற்றி அதில்‌ இருந்து விழும்‌ தண்ணீரில்‌ அந்த குழந்தையுடைய தகப்பன்‌ முதலிலும்‌, அந்த குழந்தை இரண்டாவதாகவும்‌ குளிக்க வேண்டும்‌. குழந்தை மூல நட்சத்திரத்தில்‌ பிறந்தால்‌ எட்டு மாத காலத்திற்கு தகப்பன்‌ அதன்‌ முகம்‌ பார்க்க கூடாது என்பது விதி. இது ஜாதகாபரணத்தில்‌ மிக மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 

ஆகையால்‌ குழந்தை பிறந்து எட்டு மாதங்கள்‌ கழித்து அமாவாசை அன்று இதைச் செய்வதோடு தானம்‌ முதலியவை செய்ய வேண்டும்‌. இவ்வாறு சாந்தி பரிகாரம்‌ செய்து கொள்பவர்கள்‌ மூல‌ நட்சத்திரத்தின்‌ பாதிப்பு இல்லாமல்‌ நன்றாக வாழ்வார்கள்‌. 

கல்யாணம்‌ நடைபெற கன்னிப்பெண்கள்‌ வேண்டுதல்‌ செய்தல்‌

ஒருதாய்க் குழந்தைகள் என்றாலும் அவர்கள் வாழ்க்கை வெவ்வேறாகத்தான் அமைகிறது. ஒரே வீட்டில்‌ ஒரே தாயின்‌ வயிற்றில் பிறந்தாலும் ஒருவருக்குத் திருமணம் நடைபெற்றாலும் மற்றவருக்கு நடைபெறாமல் தடைப்படலாம்.

இதுபோன்ற விவாகத் தடை இருப்பவர்கள் வளர்பிறை திருதியை திதியில்‌ எந்த சுபகாரியம்‌ செய்தாலும்‌ விருத்தியாகும்‌. ஆதலால்‌ வளர்பிறை திருதியை திதியில்‌ திருமணம் நடைபெற வேண்டி ஆண்‌, பெண்‌ இருபாலரும்‌ அன்றைய தினம்‌ விரதம்‌ அனுஷ்டித்து விநாயகர்‌ வழிபாடு செய்ய வேண்டும்‌. அதன்‌ பின்‌ மூன்றாம்‌ பிறையைப் பார்த்து, அம்மன்‌, துர்க்கை, மீனாட்சி என்று எந்த அம்பாளை வழிபட்டாலும்‌, உடனே திருமணம்‌ நடக்கும்‌. 

தொகுப்பு: ஜாம்பவான் சுவாமிகள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right