நிலந்த ஜயவர்தன பதவியில் இருக்கையில் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா ? - காவிந்த ஜயவர்தன நீதியமைச்சரிடம் கேள்வி

14 Nov, 2023 | 04:48 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையில் உயர் பதவியில் இருக்கும் போது சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா? பாதிக்கப்பட்டோருக்கான நீதி  தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன நீதியமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது  நீதியமைச்சரிடம் மேற்கண்டவாறு  கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த  ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று  நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதியும் கிடைக்கவில்லை,நிதியும் கிடைக்கவில்லை.நிதி மற்றும் நீதி இரண்டும் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.

 சிரியாவுக்கு சென்று ஒரு தரப்பினர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பயிற்சிப் பெற்றுள்ளார்கள்  என்று நீங்கள்  (நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை நோக்கி) குறிப்பிட்டீர்கள்.

ஆனால் நாட்டில் உயிர்த்த  ஞாயிறு குண்டுத்தாக்குதலை போன்று மிலேட்சத்தனமான தாக்குதல் இடம்பெறும் என்ற எவரும் எதிர்பார்க்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கில் தற்போதைய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் பெயர் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் குற்றவாளியாக பெயர் குறிப்பிடப்பட்டு நட்டஈடு செலுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நபர் பொலிஸ் சேவையில் உயர் பதவியில் இருக்கும் போது சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா ? என்பது சந்தேகத்துக்குரியது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன விஜயத்தின் போது குரங்குகள் குறித்த...

2024-12-11 17:48:14
news-image

பைசர் முஸ்தபாவின் நியமனம் தொடர்பில் பங்காளிக்...

2024-12-11 17:01:27
news-image

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் ...

2024-12-11 18:37:22
news-image

எலிக்காய்ச்சலால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக...

2024-12-11 17:31:13
news-image

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு...

2024-12-11 20:39:17
news-image

மர்ம காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் தாய்...

2024-12-11 18:23:40
news-image

மோட்டார் சைக்கிள் - ஜீப் வாகனம்...

2024-12-11 18:03:42
news-image

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் எம்.பி. ...

2024-12-11 18:39:14
news-image

சுகாதார, வெகுசன ஊடகத்துறை மீதான மக்கள்...

2024-12-11 17:36:54
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட...

2024-12-11 17:44:29
news-image

சீன இராணுவ விஞ்ஞான அகடமி ஆய்வாளர்கள்...

2024-12-11 17:29:18
news-image

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகள்...

2024-12-11 18:33:29