வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள் நாட்டு மக்களை ஏமாற்றும் மற்றுமொரு செயற்பாடு - மக்கள் விடுதலை முன்னணி

Published By: Vishnu

13 Nov, 2023 | 08:54 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் காணப்படுகிறது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் எவ்வித பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை. 

இருக்கும் பல்கலைக்கழகங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் புதிதாக நான்கு பல்கலைக்கழகங்களை அமைப்பதாக குறிப்பிடுவது நகைப்புக்குரியது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். 

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட சமர்ப்பின் போது இந்த கருத்தையே குறிப்பிட்டார். ஆனால் எந்த தவறும் திருத்திக் கொள்ளப்படவில்லை.

நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை. வரி அதிகரிப்பு,தேசிய வளங்களை விற்றல் என்பதை அரச கொள்கையாக முன்வைக்கப்பட்டுள்ளன.

வரையறையற்ற கடன்களினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் கடன்படு எல்லையை 3400 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளார். ஆகவே இந்த வரவு செலவுத் திட்டம் நடைமுறைக்கு ஒருபோதும் சாத்தியமடையாது.

நாட்டில் 17 அரச பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை.

மாறாக புதிதாக 4 பல்கலைக்கழகங்களையும்,தனியார் பல்கலைக்கழகங்களையும் உருவாக்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.இது நகைப்புக்குரியது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி தனது முன்மொழிவுகள் ஊடாக குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகம் தொடர்பில்...

2025-04-24 21:56:07
news-image

தேசபந்துவை பதவி நீக்கும் மூவரடங்கிய விசாரணைக்...

2025-04-24 21:55:36
news-image

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக "கிளீன்...

2025-04-24 21:25:17
news-image

பலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதை எதிர்ப்பது எமது நாட்டில்...

2025-04-24 17:04:13
news-image

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு : நாட்டின்...

2025-04-24 17:52:31
news-image

வொஷிங்டனில் உயர்மட்ட அதிகாரிகள் எவரையும் இலங்கை...

2025-04-24 15:49:58
news-image

அமெரிக்க பேச்சுவார்த்தைகளில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை...

2025-04-24 20:29:37
news-image

ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்...

2025-04-24 14:54:42
news-image

இப்ராஹிமின் சொத்துக்களை அரசுடமையாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு...

2025-04-24 19:03:22
news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர்...

2025-04-24 17:59:48
news-image

ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்துக்கு வருகை -...

2025-04-24 18:34:51
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு...

2025-04-24 17:44:13