உலகளாவிய ரீதியில் இந்துக்கள் முருகப்பெருமானை வணங்கி அனுஷ்டிக்கும் கந்த சஷ்டி விரதம் இன்று (நவ. 13) ஆரம்பமாகிறது.
முருகன் சூரபத்மனுடன் ஆறு நாட்கள் போரிட்டு, பின்னர் சூரசம்ஹாரம் செய்து, அசுரனை வென்று, அவனது அஞ்ஞானத்தை போக்கி, மெய்ஞ்ஞானத்தை அளித்த கதையை அடியொற்றியே கந்த சஷ்டி விரத நாட்களில் வழிபடப்படுகிறது.
சூரபத்மன் என்ற அசுரன் சிவபெருமானை வணங்கி பல வரங்கள் பெற்றான். குறிப்பாக, ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த பிள்ளையால் தனக்கு மரணம் நேரக்கூடாது என்கிற வரத்தை பெற்றான்.
தனக்கு எந்த வகையிலேனும் மரணம் நேராது என்கிற ஆணவத்தில் பூலோகத்தில் உள்ளவர்களையும் தேவர்களையும் கொடுமைப்படுத்தினான்.
கொடூரனான அசுரனை அழிப்பதற்காக சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளை வரவழைத்து அதிலிருந்து 6 குழந்தைகளை உருவாக்கினார்.
அந்த ஆறு குழந்தைகளும் ஆறுமுக கடவுளாகி, முருகனாகி சூரபத்மனை அழிப்பதற்காக பார்வதி கொடுத்த வேலுடன் போர்க்களம் நோக்கி சென்றார்.
முருகன் சூரனை சம்ஹாரம் செய்ய துணிந்துவிட்டபோது, சூரபத்மன் மரமாக உருமாறினான்.
உடனே, முருகன் தனது வெற்றிவேலினை மரத்தின் மீது எய்தவுடன், அந்த மரம் இரண்டாக பிளந்து, அதன் ஒரு பாகம் சேவலாகவும், இன்னொரு பாகம் மயிலாகவும் மாறியது.
அஞ்ஞானம் கொண்டு உலகை ஆட்டிப் படைத்த சூரனை முருகப் பெருமான் அழிக்காமல், அவனுக்கு மெய்ஞ்ஞானத்தை அளித்தார்.
அதன் பிறகு மயில் முருகனிடம் வாகனமாகவும் சேவல் முருகனின் கொடியாகவும் சரணடைந்தது.
இந்த மாபெரும் தத்தவ கதையை எடுத்துரைக்கும் விதமாக கந்த சஷ்டி இந்துக்களால் வழிபடப்படுகிறது.
இன்று உலகெங்கும் உள்ள முருகன் ஆலயங்களில் வெகு சிறப்பாக கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டும், இசைக்கப்பட்டும் பக்தர்களால் வழிபாடுகள் செய்யப்படும்.
பக்தர்கள் வாழ்க்கையின் அனைத்து நலன்களும் கைகூட வேண்டும் என்பதற்காக கந்த சஷ்டி நாட்களில் விரதம் நோற்பது வழக்கம்.
இத்தகைய மகிமைகள் அடங்கிய கந்த சஷ்டி நாட்களில் வழிபடும் சகலருக்கும் முருகன் சகல செளபாக்கியங்களையும் அள்ளிக் கொடுப்பார் என நம்புவோமாக!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM