தற்போது ராகு, கேது இடப்பெயர்ச்சி நடந்துகொண்டிருக்கின்றன. பலர் இவர்களது இடம்பெயர்வினால் பயமும் அதிர்ச்சியும் கொண்டிருப்பர்.
எனினும், ராகு, கேது ஒருவரின் ராசிக்கு வந்துவிட்டால் அந்த ராசிக்காரர் மிகவும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், உங்கள் நடத்தையை பொறுத்தே ராகுவும் கேதுவும் உங்களை கணித்து உரியதை கொடுப்பர். அது நன்மையாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும் சரி.
இனி ராகு, கேதுவின் குணாம்சங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
மனித முகமும் பாம்பின் உடலும் கொண்ட கிரக நாயகன் ராகு. பாம்பின் தலையும் மனித உடலும் உருப்பெற்றவர், கேது பகவான். இவர்கள் இருவரும் கடும் தவம் புரிந்து சிவபெருமானின் அருளால் நவக்கிரக பதவியை அடைந்ததாக கூறப்படுகிறது.
நிழல் கிரகமான இவர்கள், சக்தி தேவி மற்றும் விநாயகரின் கட்டுப்பாட்டில் மனித வாழ்க்கையில் நுழைந்தார்கள்.
மனிதனின் உடலில் 9 ஓட்டைகள் உள்ளன. இவர்கள் காற்றாக நம்முடைய உடலில் நுழைவார்கள்.
தலைப்பாகம் கேதுவுக்கு, கால் பாகம் ராகுவுக்கு என்று பிரித்துக்கொண்டு நம்மில் வாசம் செய்வார்கள்.
சோதிட உலகில் இவர்களது பங்கு இன்றியமையாதது. ஒருவரது வாழ்க்கையையே மாற்றிப் போடும் தன்மை இந்த ராகு, கேதுவுக்கு உண்டு.
ஆண்டியை அரசனாக்கும் வல்லமை ராகுவுக்கும்; அரசனை ஞானியாக்கும் ஆற்றல் கேதுவுக்கும் கிடைத்ததாகச் சொல்வர்.
இந்த கிரகங்கள், ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியடைவர். இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது. எந்த ராசியில் அமர்ந்துள்ளனரோ, அந்த ராசிக்கு உரிய கிரகத்துடன் இணைந்தே பலன் தருவார்கள்.
ராகுவின் தன்மைகள்
ராகுவின் நட்சத்திரம் சதையம், சுவாதி, திருவாதிரை.
கருமையானவர், தென்மேற்கு திசைக்கு அதிபதி.
கிரகங்களில் பெண் கிரகம், இனத்தில் சங்கிரமன், வடிவில் உயரம், தொடை, பாதம் மற்றும் கணுக்காலுக்கு உரியவர்.
பஞ்ச பூதத்தில் ஆகாயமான இவர். சரக்கிரகமும் கூட (மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சரராசிகள் என்பர்)
இவர் நமக்கு தீமையாக அமைந்துவிட்டால் நம் கால்கள் பாதிப்படைந்து இருக்கும். போதை பழக்கம் அல்லது மருந்து எப்பொழுதும் உண்ண வேண்டி வரும்.
இவர் பலமானால் தலைவலி மட்டும் வரும்.
விஞ்ஞானி, மருத்துவர் போன்ற துறைகளில் மேன்மையாக இருப்பார்.
பில்லி, ஏவல், சூனியம் இவர்கள் எளிமையாக செய்வார்கள்.
சோதிடத்தில் நாக தோஷம் என்றால் அது ராகுவையும் கேதுவையுமே குறிக்கும்.
கேதுவின் தன்மைகள்
கேதுவின் நட்சத்திரம் அஸ்வினி, மகம், மூலம்.
இவர் செந்நிறம் கொண்டவர். வடமேற்கு திசைக்கு அதிபதி, ஆண் கிரகம், இனத்தில் சங்கிரமன், மர்ம உறுப்புக்கு அதிபதி.
பல வண்ணங்கள் கொண்ட வஸ்திரம் இவருக்குப் பிடிக்கும். பஞ்சபூதங்களில் இவர் ஆகாயம்.
ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீசண்டிகேஸ்வரரும் கேதுவின் அதிதேவதைகள்.
வாழ்வின் பிற்பகுதியில் பலன் தரும் கிரகம் இவர்.
கேது, நேர், எதிர்மறையான பலன்களை உடையவர்.
இவருக்கு எந்த தீய செயல் செய்தாலும் அதனை சரி செய்யும் மருந்து தெரியும்.
பாதிக்கப்பட்ட நபர்கள் இவரின் ஆசியால் சுபம் அடைவார்கள்.
சித்தர்கள் இவரின் வழியாகத்தான் சகல ஞான கணக்குகளை அறிவார்கள்.
ஞானமான இவர் ஒருவரின் ஜாதகத்தில் நன்கு அமைந்துவிட்டால் பொதுப் பணிகளில் சிறந்த பெயரை கொண்டிருப்பதோடு, பலர் இவரை வணங்கும்படியாக இருப்பார்கள்.
நண்பர்கள் இவர்களை நன்கு மதிப்பார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM