யாழ். உரும்பிராயில் குழு மோதல் : 3 இளைஞர்கள் காயம்

13 Nov, 2023 | 03:50 PM
image

தீபாவளி தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இரவு இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று இளைஞர்கள் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் உரும்பிராய் சந்திக்கு அருகில் இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

உரும்பிராய் சந்திக்கு அருகில் இளைஞர் குழு ஒன்று வீதியில் நின்றுள்ளது. அதன் போது வீதியில் கன ரக வாகனத்தில் சென்ற ஏழாலை பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் முரண்பாடு ஏற்பட்டு, இரு குழுவினரும் வீதியில் மோதிக்கொண்டனர். 

அதன் போது அவர்கள் பயணித்த கன ரக வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து அவர்கள்  அவ்விடத்தில் இருந்து தப்பி தமது ஊருக்கு சென்று, மேலும் சில இளைஞர்களுடன் மூன்று கன  ரக வாகனத்தில் உரும்பிராய் சந்தி பகுதிக்கு வந்து தம்மை தாக்கியவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இரு இளைஞர் குழுக்களும் வீதியில் மோதிக்கொண்டமையால், வீதியின் ஊடான போக்குவரத்து ஒரு சில மணி நேரம் தடைப்பட்டு இருந்தது. 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்த போது , பொலிசாரை கண்டதும் மோதலில் ஈடுபட்ட நபர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். 

அதேவேளை மோதலில் காயமடைந்த மூன்று இளைஞர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45
news-image

யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக...

2025-03-20 17:40:56
news-image

கராபிட்டிய வைத்தியசாலையில் கதிரியல் சிகிச்சைகள் ஸ்தம்பிதம்

2025-03-20 17:39:42
news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 17:28:26
news-image

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி வேட்பு...

2025-03-20 17:39:18
news-image

அலோசியஸிடமிருந்து நிதிபெற்ற அரசியல்வாதிகளின் பட்டியல் விரைவில்...

2025-03-20 15:19:36
news-image

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார்...

2025-03-20 16:52:31
news-image

நுவரெலியா மாவட்டத்தில் வேட்பு மனுவை தாக்கல்...

2025-03-20 17:42:10
news-image

மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவிற்கு பயணத்தடை

2025-03-20 17:27:21
news-image

யாழில் 11 கட்சிகளும் 27 சுயேட்சை...

2025-03-20 17:37:44