நாட்டில் அரசியல் நெருக்கடியல்ல,பொருளாதார நெருக்கடியே உள்ளது ; எதிர்க்கட்சிகள் விளங்கிக் கொள்ள வேண்டும் - நிதி இராஜாங்க அமைச்சர்

Published By: P. Saranya

13 Nov, 2023 | 04:13 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சகல தரப்பினரது கோரிக்கைகளையும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்ற முடியாது.நாட்டில் பொருளாதார நெருக்கடி உள்ளதே தவிர அரசியல் நெருக்கடி இல்லை என்பதை எதிர்க்கட்சிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாரிய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளார் என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜனாதிபதியிடம் வரவு செலவு திட்டத்தை புகழ்ந்து விட்டு குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மக்கள் மத்தியில் வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பது முறையற்றது.

நாடு தற்போது  பொருளாதார நெருக்கடி உள்ளதே தவிர அரசியல் நெருக்கடி இல்லை என்பதை எதிர்க்கட்சிகள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.கடந்த ஒருவருட காலமாக அரசியல் நோக்கமில்லாமல் தீர்மானங்கள் எடுத்ததால் நாடு சற்றேனும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

சகல தரப்பினராலும்  முன்வைக்கப்படும் பரிந்துரைகளை  வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்ற முடியாது.2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்  நிலையான பொருளாதார கொள்கை என்பதை இலக்காக கொண்டுள்ளது.அரச சேவையாளர்களுக்கு 10,000 ரூபா  கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்தும் நோக்கம் ஏதும் கிடையாது.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் யோசனைகள் குறித்து நிச்சயம் அவதானம் செலுத்துவோம்.எதிர்க்கட்சிகளை புறக்கணித்து ஒருபோதும் செயற்பட போவதில்லை.பொருளாதார மீட்சிக்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திர கட்சிக்கு அழைப்பில்லை சாமர சம்பத்...

2026-09-12 17:44:08
news-image

நாமல் சிறைசென்றுள்ளமை அரசியல் பழிவாங்கல் அல்ல...

2026-09-12 17:17:36
news-image

செயற்கையான டீசல் தட்டுப்பாட்டை உருவாக்கி எரிபொருள்...

2026-09-12 17:15:27
news-image

சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத...

2026-09-12 18:02:29
news-image

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை சி.டி.ஸ்கேன் நிதி...

2026-09-12 17:44:49
news-image

வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான...

2026-09-12 17:16:55
news-image

அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் பேருந்துடன்...

2026-09-12 17:15:07
news-image

மக்களின் பங்களிப்போடு புதிய அரசியலமைப்பு வேண்டும்...

2026-09-12 15:07:30
news-image

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக...

2026-09-12 16:17:37
news-image

கடந்த அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்தைப் போன்றே இவ்...

2026-09-12 16:17:21
news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07