குட்டி ராதிகாவின் அகோரி அவதாரம் 

13 Nov, 2023 | 03:38 PM
image

கன்னட நடிகை குட்டி ராதிகா தமிழில் 'இயற்கை', 'மீசை மாதவன்', 'வர்ணஜாலம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது நடிக்கும் கன்னட படமான 'பைரா தேவி'யில்  அகோரியாக நடிக்கிறார். 

இந்த படத்தில ரமேஷ் அரவிந்த், ரங்கையனா ரகு, ரவிசங்கர், ஸ்கந்தா அசோக், அனு முகர்ஜி, மாளவிகா அவினாஷ், சுசீந்திரா பிரசாத் என பலர் நடித்துள்ளனர். 

இதில் ரமேஷ் அரவிந்த் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். 

ஸ்ரீ ஜெய் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த படத்துக்கு ஜே.எஸ். வாலி ஒளிப்பதிவு செய்கிறார். கே.கே. செந்தில் பிரசாத் இசையமைக்கிறார். 

இந்தியாவின் வாரணாசி, காசி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தை ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. 

குட்டி ராதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்