கன்னட நடிகர் உபேந்தராவின் மனைவி பிரியங்கா சிசிடிவி கெமரா மூலம் உருவாகிவரும் 'கேப்ச்சர்' என்ற படத்தை தயாரித்து, அதில் நடித்து வருகிறார்.
அலுவலகங்கள், சாலைகள், வீடுகளில் கண்காணிப்பு கெமரா தற்போது பொருத்தப்படுகிறது. இந்த கெமராவில் பதிவான காட்சிகளை திரைக்கதையாக்கி இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
உலகிலேயே ஒரே ஒரு லென்ஸை மட்டும் பயன்படுத்தி எடுக்கப்படும் படம் இதுவாகும்.
லோஹித். ஹெச் இந்த படத்தை இயக்குவதன் மூலம் மம்மி மற்றும் தேவகி ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரியங்காவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ரவிராஜ், ஷாமிகா என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படம் முழுவதும் கோவாவில் 30 நாட்களில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் விதமாக தயாராகி வருகிறது.
சிவராஜ்குமாரின் 'டகரு' படத்தின் மூலம் புகழ்பெற்ற மன்விதா காமத், மாஸ்டர் கிருஷ்ணராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இந்த படத்துக்கு பாண்டிக்குமார் ஒளிப்பதிவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM