புறக்கோட்டை பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 1000 ரூபா இலஞ்சம் வழங்க குறித்த நபர் முற்பட்டுள்ளார்.

மஹரகம - புறக்கோட்டை (138) பஸ் நடத்துனர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விதிமுறைகளை மீறிய பஸ்ஸிற்கு எதிராக வழக்கு தொடர்வதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்ட போதே குறித்த பஸ் நடத்துனர் இலஞ்சம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பஸ் நடத்துனரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.