ஹோமாகம பிட்டிபன, பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் பிள்ளைகளைக் கொலை செய்யப் போவதாக மிரட்டி 20 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட கிராம சேவகரை இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதிவான் பந்து லியனகே உத்தரவிட்டுள்ளார்.
ஹோமாகம, பிட்டிபன தெற்கு பகுதியைச் சேர்ந்த கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹோமாகம சுவபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரை மிரட்டி 20 இலட்சம் ரூபா கப்பம் வழங்காவிட்டால் மூன்று பிள்ளைகளையும் கொன்று விடுவதாக அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஹோமாகம தலைமையக பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்தே குறித்த கிராம அதிகாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM