முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு அவசியமா?

Published By: Vishnu

12 Nov, 2023 | 06:38 PM
image

எம்.எஸ்.தீன்

இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் பலம், முஸ்லிம் கட்­சி­களின் நட­வ­டிக்­கை­க­ளினால் சிதைக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்கள் மத்­தியில், முஸ்லிம் காங்­கிரஸ் என்­பது தனித்­து­மான கட்­சி­யாக இருந்த போது பேரம் பேசும் சக்­தி­யா­கவும், அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் கட்­சி­யா­கவும் திகழ்ந்­தது. அத­னால்தான் தென்­கி­ழக்கு பல்­கலைக்கழகம், ஒலுவில் துறை­முகம், தொழில் வாய்ப்­புக்கள் போன்ற பல­வற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடி­ய­தாக இருந்­தது.

ஆனால், அஷ்­ரப்பின் மர­ணத்தின் பின்னர் இந்தப் பேரம் பேசும் சக்தி முஸ்லிம் காங்­கி­ரஸின் முக்­கி­யஸ்­தர்­க­ளி­னா­லேயே சிதைக்­கப்­பட்­டது. தலை­மைத்­துவ பத­விக்கு ஏற்­பட்ட போட்டி நிலை, கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­களை ஓரங்­கட்­டு­வ­தற்கு எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள், புதி­ய­வர்­களை நம்பி கட்­சியின் தூணாக செயற்­பட்­ட­வர்­களை தூர­மாக்கிக் கொண்­டமை.

தலை­வரும், அவரைச் சூழ்ந்து இருந்­த­வர்­களின் திட்­ட­மிட்ட நட­வ­டிக்­கை­க­ளினால் உயர்­பீட உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட அதி­க­ரிப்பு, அமைச்சர் பத­விக்­காக ஏற்­பட்ட போட்டி நிலை, கட்­சிக்குள் ஏற்­பட்ட முரண்­பா­டு­களை தீர்ப்­ப­தற்கு சரி­யான அணு­கு­ மு­றை­களை கையா­ளாமை,  கட்­சி­யி­லி­ருந்து பிரிந்­த­வர்­களும், விலக்­கப்­பட்­ட­வர்­களும் இணைந்து புதிய கட்­சி­களை தோற்­று­வித்­தமை, ஆட்­சி­யா­ளர்­களின் திட்­ட­மிட்ட செயற்­பா­டுகள் போன்ற பல கார­ணங்­க­ளினால் முஸ்­லிம்­களின் அர­சியல் சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்­டுள்­ளது. இதனால், முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை காது கொடுத்து கேட்­ப­தற்கு கூட ஆட்­சி­யா­ளர்கள் தயா­ரில்­லாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இந்தப் பின்­ன­ணியில் இன்று முஸ்­லிம்­க­ளி­டையே முஸ்லிம் காங்­கிரஸ் உட்­பட பல கட்­சிகள் உள்­ளன. ஆயினும் எந்­த­வொரு கட்­சியும் பலம் வாய்ந்த நிலையில் இல்லை. இருக்­கின்ற கட்­சி­க­ளுக்குள் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு செல்­வாக்கு அதிகம் என்று சொல்­ல­லா­மே­யன்றி, அக்­கட்­சிதான் முஸ்­லிம்­களின் அதி­க­பட்ச ஆத­ரவைப் பெற்ற கட்­சி­யென்று சொல்ல முடி­யாது. முஸ்லிம் காங்­கி­ர­ஸா­ருக்கு இது கசப்­பாக இருந்­தாலும் இதுதான் உண்­மை­யாகும்.

முஸ்­லிம்­களின் அர­சியல் பலம் சிதைக்­கப்­பட்­டுள்ள இன்­றைய அர­சியல் சூழலில் முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தாம் அங்­கத்­துவம் பெற்­றுள்ள கட்­சியை பாரா­ளு­மன்றம் செல்­வ­தற்­கு­ரிய ஒரு கரு­வி­யாக மட்டும் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். தேர்தல் முடிந்­ததும் கட்­சியின் கட்­டுப்­பா­டு­களை மீறி, தமக்கும் கட்­சிக்கும் எந்த தொடர்­பு­மில்லை போன்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முதல் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்­கள்வரை செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதனால் முஸ்லிம் கட்­சிகள் யாவும் மேலும் பின்­ன­டை­வு­களையே  கண்­டுள்­ளன.

இதனால், முஸ்­லிம்­களின் அர­சியல் பலத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் கட்­சிகள் யாவும் ஒரு கூட்­ட­மைப்­பாக உரு­வாக்கம் பெற வேண்­டு­மென்று தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்றார். இவ­ரது இக்­க­ருத்­துக்­களின் பின்­ன­ணியில் முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு மிகப் பெரிய அர­சியல் ஆதாயம் இருக்­கின்­றது. ஆயினும், முஸ்லிம் கட்­சி­களை ஒற்­று­மைப்­ப­டுத்­தி­யாக வேண்டும்.

முஸ்லிம் கட்­சிகள் ஒரு கூட்­ட­மைப்­பாக ஒற்­று­மைப்­படும் போது அம்­பாறை மாவட்­டத்தில் 4 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும், திரு­கோ­ண­மலை மற்றும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­களில் தலா 3 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களையும் பெற்றுக் கொள்­ளலாம் என்றும், முஸ்­லிம்­களின் அர­சியல் பலத்தை அதி­க­ரித்துக் கொள்­ள­லா­மென்றும் ரவூப் ஹக்கீம் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்றார்.

முஸ்­லிம்­களின் அர­சியல் பலத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அமைந்­தி­ருந்­தாலும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை மட்டும் அதி­க­ரித்து முஸ்­லிம்­களின் அர­சியல் பலத்தை அதி­க­ரிக்க முடி­யாது. இதுவே கடந்த கால அனு­ப­வ­மாகும். மிகவும் இறுக்­கான உடன்­ப­டிக்­கை­களும், கட்­டுப்­பா­டு­களும், பாகு­பா­டற்ற நட­வ­டிக்­கை­களும் இருக்க வேண்டும்.

மர்ஹும் அஷ்­ரப்பின் மர­ணத்தின் பின்னர் முஸ்லிம் காங்­கிரஸ் 10 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைப் பெற்றுக் கொண்­டது. ஆனால், அதனால் முஸ்­லிம்­களின் உரி­மை­களைப் பெற்றுக் கொள்ள முடி­ய­வில்லை. பாரிய அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்ள முடி­ய­வில்லை. ஆட்சி அதி­கா­ரத்தில் பங்­காளி என்று இருந்­த­தோடு மட்­டு­மல்­லாது பலர் அமைச்சர் பத­வி­க­ளையும் பெற்றுக் கொண்­டனர்.

கட்­சியின் தலை­மை­யோடு முரண்­பட்டுக் கொண்டு புதிய கட்­சி­களை ஆரம்­பித்­தார்கள். முஸ்­லிம்­களின் வாக்­கு­களை பங்கு போட்டுக் கொண்­டார்கள். முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் அவர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு கூட தைரியம்  இருக்­க­வில்லை.

ஆகவே, அதிக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைப் பெற்றுக் கொள்­வது என்­ப­தற்கு அப்பால், சமூ­கத்தின் உரி­மை­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு முன்­னு­ரிமை அளிக்கும் வகையில் கட்­டுப்­பா­டுகள் இருக்க வேண்டும். கட்­சி­க­ளுக்கு இடையே செய்து கொள்­ளப்­படும் உடன்­ப­டிக்கைள் வெளிப்­படைத் தன்­மை­களைக் கொண்­டி­ருக்க வேண்டும்.

வாக்­க­ளிக்கும் மக்­க­ள் அது பற்றி தெரிந்­தி­ருக்க வேண்டும். அதை மீறும் போது பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை பறி போய்­விடும் என்ற அச்சம் இருக்க வேண்டும். உடன்­ப­டிக்­கைளை அர­சியல் கட்­சிகள் ஒன்று சேர்ந்து செய்யக் கூடாது. முஸ்­லிம்  சிவில் அமைப்­புக்­களின் முன்­னி­லையில் செய்­யப்­பட வேண்டும். அர­சியல் கட்­சி­களை கட்­டுப்­ப­டுத்­தவும், கண்­கா­ணிக்­கவும் அந்த சிவில் அமைப்­புக்கு அதி­காரம் வழங்­கப்­பட வேண்டும். அப்­போ­துதான் முஸ்லிம் சமூ­கத்தின் உண்­மை­யான தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்கும், ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் பேரம் பேசவும் முடியும்.

பேரம் பேசு­வதைக் கூட அர­சியல் கட்­சிகள் செய்யக் கூடாது, அர­சியல் கட்­சி­களை ஒன்­றி­ணைக்கும் சிவில் அமைப்பே செய்ய வேண்டும். இதனைச் செய்­வ­தற்கு அகில இலங்கை ஜம்­மிய்­யத்துல் உலமா சபை பொருத்தம் என்­பதே பொதுவான கருத்து.   இதனை விட வேறு பொருத்­த­ம­ான சிவில் அமைப்­புக்­களும் இந்த வேலையை செய்­யலாம். சிவில் அமைப்­புக்­களின் கூட்­ட­மைப்பும் இதனை செய்­வ­தற்­கு­ரிய ஏற்­பா­டு­களை செய்­யலாம்.

இவ்­வா­றான ஓர் ஏற்­பாட்டை செய்­யாது.  தேர்­தலில் மாத்­திரம் போட்­டி­யி­டு­வ­தற்கு ஒரு முஸ்லிம் கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­விட்டு, தேர்­தலின் பின்னர் தனித்­த­னியே செயற்பட அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பை பயன்படுத்தி அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் அரசியல் கட்சி ஆட்சியாளர்களுடன் இணைந்து கொண்டு அமைச்சர் பதவிகளைக் பெற்றுக் கொள்வர். இதனால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்த நன்மைகளும் கிடைக்காது.

தேர்தலில் பிரிந்து செயற்படுவதற்கு அனுமதி இருக்குமாயின் முஸ்லிம் காங்கிரஸ் அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும். அதனால் முஸ்லிம் கூட்டமைப்பின் நோக்கம் ஒரு தேர்தலின் பின்னர் சிதைந்துவிடும். முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு முஸ்லிம்களுக்காக இருக்க வேண்டுமே அல்லாது முஸ்லிம் கட்சிகள் பயன் பெறுவதற்கும் மாத்திரம் அமைந்து விடக் கூடாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் தளத்தில் நீங்கள் பாது­காப்­பாக இருக்­கின்­றீர்­களா?...

2026-07-15 19:28:11
news-image

'நிழல் அரசு' அச்சுறுத்தல்: நிறைவேற்றுத்துறையினால் நீதித்துறையை...

2026-07-15 10:33:52
news-image

சர்வதேச சவால்களை முறியடித்த இலங்கை சுற்றுலாத்துறை...

2026-07-14 18:22:05
news-image

ஆசியாவின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல்...

2026-07-14 14:49:21
news-image

பாகிஸ்தானின் முடிவில்லா உள்நாட்டுப் போர் : ...

2026-07-14 14:10:51
news-image

கார்மேகங்கள் சூழும் மாகாண சபை தேர்தல்கள்...

2026-07-14 11:13:28
news-image

‘எல்நினோ’ காலநிலை மாற்றங்களால் பொருளாதார விளைவுகளை...

2026-07-14 05:44:12
news-image

  3 சதவீத பொருளாதார வளர்ச்சியெனும் எதிர்வு ...

2026-07-14 05:18:56
news-image

தேசிய ஆவணக்காப்பகத்திலுள்ள மலையக ஆவணங்களின் எதிர்காலம்

2026-07-13 10:54:03
news-image

இரத்தம் தோய்ந்த சிறை வன்­மு­றைகள்

2026-07-12 16:08:33
news-image

புதிய ஆயரும் சர்ச்­சையும்

2026-07-12 15:17:06
news-image

வேர்­களைத் தேடிய பயணம்

2026-07-12 14:47:22