(எம்.வை.எம்.சியாம்)
லிட்ரோ மற்றும் மில்கோ நட்டமடையும் நிறுவனங்கள் அல்ல. நெருக்கடியை பயன்படுத்தி எம்மால் இதனை செய்ய முடியாது என கூறி தேசிய சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அது தொடர்பில் எம்மால் திருப்தியடை முடியாது என மேலவை இலங்கை கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றமை, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் மாநாடொன்றை மேலவை இலங்கை கூட்டணி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்திருந்தது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
லிட்ரோ நிறுவனம் நட்டமடையும் நிறுவனமொன்று அல்ல. அந்த நிறுவனத்தினால் 6 பில்லியன் ரூபா திறைசேரிக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும் அந்த நிறுவனத்தையும் தற்போது தனியாருக்கு விற்பனை செய்யப்பார்க்கின்றனர். மின்சக்தி நிறுவனங்கள் விற்பனை செய்யப்படும் செயற்பாடு நாட்டின் அரசியல் இருப்பை கேள்விக்குறியாகியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்கு செல்வதற்கு வித்திட்ட பிரதான காரணியாக அமைந்தது.
இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வந்ததன் பின்னர் ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரும் வெடிக்கவில்லை அல்லவா? தேவை ஏற்பட்டால் வெடிக்க வைக்க முடியும். மில்கோ நிறுவனமும் நட்மடையும் நிறுவனம் அல்ல. நெருக்கடியை பயன்படுத்தி தேசிய சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அது தொடர்பில் எம்மால் திருப்தியடை முடியாது எம்மால் இதனை செய்ய முடியாது என கூறி தனியாருக்கு வழங்குகின்றனர். 3 தசாப்தங்களாக காணப்பட்ட யுத்தத்தை எம்மால் வெற்றிக்கொள்ள முடியும் என்றால் இந்த பொருளாதார நெருக்கடிகளிலிருந்தும் எம்மால் மீண்டெழ முடியும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்க ஒன்றாகும்.மேலவை இலங்கை கூட்டணி தீர்மானமிக்கதும், தெளிவான கொள்கைகளை வகுத்தும் ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்கும். தோல்வியடைந்த மற்றும் நாடு தொடர்பில் எந்தவொரு பற்று இல்லாதவர்கள் மூலம் நாட்டுக்கு பாரிய அழிவு மாத்திரமே ஏற்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM