நாடளாவிய ரீதியில் தீபாவளி பண்டிகை அமைதியான முறையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
மலையகம்
இதன்படி மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை இன்று ஞாயிற்றுக்கிழமை (12) வெகு விமர்சயாக கொண்டாடினார்கள்.
அட்டன் பகுதியில் அட்டன் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் சுவாமி ஆலயத்தின் பிரதான குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.
விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
தீபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் இன்று விசேட பூஜைகள் நடைபெற்றன.
வரலாற்று சிறப்புமிக்க நல்லைக்கந்தன் ஆலயம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் ஆகியவற்றில் தீபாவளி விசேட பூஜைகள் நடைபெற்றன.
தீபத்திருநாளை மக்கள் மகிழ்வுடன் கொண்டாடி வருவதுடன், ஆலயங்கள் தோறும் பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.
இந்த விசேட பூஜைகளில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின் போது ஆடைக் கொள்வனவு உள்ளிட்ட பல விடயங்களில் ஆர்வம் காட்டவில்லை.
இன மத ஐக்கியத்திற்கான பூஜை வழிபாடு இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி தினத்தன்று நல்லூர் சிவன் ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்றது.
தேசிய இன நல்லிணக்கத்துக்கான அதிகார சபையின் தலைவர் கந்தையா கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இன மத ஐக்கியதுக்கான பொங்கல் இடம்பெற்றதுடன் விசேட யாகம் வளர்க்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன், தொழிலதிபர் இ.எஸ்.பி. நாகரத்தினம், யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் வேல் நம்பி, யாழ்ப்பாண பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் பிரதேச பொலிஸ் நிலையங்களின் பொறுப்பு அதிகாரிகள் இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நாயன்மார்க்கட்டு எஸ் ஓ.எஸ்.கிராம பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன. அத்துடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு
பிரசித்திபெற்ற களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற தீபாவளி விசேட பூஜைகள்.
தீபாவளி பண்டிகையை இந்துக்கள் இன்றயதினம் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்து ஆலயங்களில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகளும், கிரியைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(12) காலை மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இதன்போது ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மயூரவதனக் குருக்கள் தலைமையிலான குருமார் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர். இதில் களுவாஞ்சிகுடி முகாமை ஆலைய பரிபாலன சபையினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததோடு, ஆலய பிரதம குரு மற்றும் பெரியோர்களால் கலந்து கொண்ட மக்களுக்கு தீபாவளி பண்டிகையின் சிறப்புக்கள் தொடர்பில் கருத்துக்களையும் தெரிவித்து, வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
கொழும்பு
தீபாவளி தினமான நேற்று கொழும்பு, மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர் .
மன்னார்
தீபாவளியை முன்னிட்டு மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை இடம் பெற்றதுடன் மக்களும் பக்தி பூர்வமாக பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
குறிப்பாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு மஹா ஸ்ரீ கருணாநந்த குருக்கள் தலைமையில் காலை 8 மணியளவில் தீபாவளி விசேட பூஜை இடம்பெற்றது.
தீபாவளி மக்களுக்கு சந்தோசத்தையும் செழிப்பையும் வழங்க வேண்டியும் விசேட பூஜை வழிபாடு இடம் பெற்றது.
மேலும் சிற்றாலயங்களிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மக்கள் ஒன்று கூடி வழிபாடுகளை மேற்கொண்டதுடன் விரதங்களை மேற்கொண்ட மக்களும் நேர்த்திக்கடன்கள் ஆலயங்களில் நிறை வேற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM