மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி மற்றும் மஞ்சந்தொடு வாய் பிரதேசங்களிலுள்ள 6 பாடசாலைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டில் கற்றும் 127 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கண் பரிசோதனையின்போது 15 மாணவர்களின் கண் பார்வையில் குறைபாடு காணப்பட்டுள்ளதாக கண் பரிசோதனை முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இலவச கண் பரிசோதனை நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் நேற்று சனிக்கிழமை (11) நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 1988 ஆம் ஆண்டு கல்வி கற்று கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களினால் உருவாக்கப்பட்ட சிவானந்தா விவேகானந்தா மாணவ ஒன்றியம் கல்லடி பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி மற்றும் அதனுடன் சார்ந்த பாடசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கையிலும் பங்களிப்பு செய்து வருகின்றது.
அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு முதல் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்குகளும், விஷேட கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் சிறிகரநாதன் தலைமையிலான வைத்திய குழுவினரினால் தரம் இரண்டு மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாமினை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான, இலவச கண் பரிசோதனை முகாம் சிவானந்தா மற்றும் விவேகானந்தா மாணவ ஒன்றியத்தின் தலைவர் விஷேட கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் சிறிகரநாதன் தலைமையில் மட்டக்களப்பபு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் இன்று நடைபெற்றது .
கல்லடி பிரதேசத்திற்குட்பட்ட 06 பாடசாலைகளின் தரம் இரண்டு மாணவர்களுக்கான கண் பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டதுடன், கண் பிரச்சினைகள் இனம் காணப்பட்ட மாணவர்களுக்கான மேலதிக சிகிச்சைக்கான பரிந்துரைகளும் மாணவர்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் சிவானந்தா விவேகானந்தா பாடசாலைகளின் அதிபர்கள், சிவானந்தா பாடசாலை பழைய மாணவ சங்க தலைவரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான வி.வாசுதேவன், மாவட்ட தகவல் பொறுப்பதிகாரி மற்றும் சிவானந்தா, விவேகானந்தா மாணவ ஒன்றிய உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு விஷன் கெயார் நிறுவனமும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களின் கண்களை பரிசீலனை மேற்கொள்வதற்கு ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM