(ஆர்.யசி )

எமது போராட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்ட சுதந்தரத்தை இன்று விமர்சிப்பவர்கள் அனுபவித்து வருகின்றனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தனியார் வைத்திய பீடம் தொடர்பில் விமர்சிக்கின்றனர். தரத்தின் அடிப்படியிலும் இராணுவ வைத்திய சேவையை அதிகரிக்கவுமே நாம் கொத்தலாவலை வைத்திய பீடத்தை உருவாக்கினோம்.

முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த எம்மை விமர்சித்துக்கொண்டு நாம் ஏற்படுத்திக்கொடுத்த சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர்.

அவர்கள் ஆட்சியில் இருந்த போது முன்னேடுக்காத விடயங்கள் தொடர்பில் இன்று யுத்தம் முடிந்த பிறகு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எனது பதவிக்காலத்தில் யுத்தத்தை எவ்வாறு முடிவுக்கு கொண்டுவருவது என்ற எண்ணம் மட்டுமே எம்மிடம் இருந்தது. எமது போராட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்ட சுதந்தரத்தை இன்று விமர்சிப்பவர்கள் அனுபவித்து வருகின்றனர்.

மேலும் இன்று தனியார் வைத்திய பீடம் தொடர்பில் விமர்சிக்கின்றனர். இதுவும் எனது நடவடிக்கைகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்ட ஒன்றாகும். காரணம் நான்  பாதுகாப்பு பல்கலைக்கழகமான கொத்தலாவல வைத்திய பீடம் ஒன்றை உருவாக்கினேன்.

நான் அதை வற்புறுத்தி உருவாக்கினேன் என சில சந்தர்ப்பங்களில் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன . ஆனால் அது அவ்வாறு நடைபெறவில்லை தரத்தின் அடிப்படியில் இவை உருவாக்கப்பட்டன. அதற்கான சாட்சியங்கள் உள்ளன.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.