வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கோமரசங்குளம் பகுதியிலுள்ள குளமொன்று உடைப்பெடுத்தமையினால் அதன் கீழுள்ள 15 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் முழ்கி பாதிப்படைந்துள்ளமையுடன் குளத்தின் நீர் தொடர்ந்தும் வெளியேறிய வண்ணமுள்ளது.
மாவட்டத்தின் கடந்த சில நாட்களாக தொடரும் மழையுடனான காலநிலையினால் பல குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்பட்ட நிலையிலேயே இவ் குளம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை உடைப்பெடுத்துள்ளது.
ஊர் மக்கள் பல மணிநேரமாக குளத்தின் உடைபெடுத்த பகுதியினை மண்நிரப்பி கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை பயனளிக்கவில்லை.
கோமரசங்குளம் பகுதியிலுள்ள இவ் குளம் நீண்ட காலமாக எவ்வித புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. என்பதுடன் குளத்தின் கீழ் 35ஏக்கர் வயல் நிலங்கள் காணப்படுகின்ற போதிலும் தற்போது 15 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
இவ் அனர்த்தம் தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு தகவல் வழங்கியமையுடன் இவ் குளத்திலிருந்து வெளியேறும் நீரினை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM