அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தும் சம்பியன்ஸ் கிண்ண வாய்ப்பை பற்றிப்பிடித்துக்கொண்டது பங்களாதேஷ்

11 Nov, 2023 | 07:30 PM
image

(இந்தியாவிலிருந்து நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பூனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் சனிக்கிழமை (11) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்ளாதேஷ் தோல்வி அடைந்த போதிலும் சிறந்த நிகர ஓட்ட வித்தியாச அடிப்படையில் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில்    விளையாடும் தகுதியை உறுதிசெய்துகொண்டது.

இன்றைய போட்டியில் பங்களாதேஷின் வழமையான அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் விளையாடாததால் அவருக்குப் பதிலாக நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ தலைவராக விளையாடினார்.

அவுஸ்திரேலிய அணியில் மிச்செல் ஸ்டார்க், க்ளென் மெக்ஸ்வெல் ஆகியோருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித், சோன் அபொட் ஆகிய இருவரும் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.  

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 307 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 44.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் மகத்தான வெற்றியை ஈட்டியது.

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியா விரட்டிக்கடந்த மிகப் பெரிய வெற்றி இலக்கு இதுவாகும்.

இந்த வெற்றியில் மிச்செல் மார்ஷ் குவித்த அதிரடி சதம், டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித் பெற்ற அரைச் சதங்களும் அவர்களிடையே பகிரப்பட்ட இரு வேறு இணைப்பாட்டங்களும் பெரும் பங்காற்றின.

இதேவேளை, அவுஸ்திரேலியா 22.4 ஓவர்களுக்குள் வெற்றி இலக்கை கடக்கத் தவறிதால் சம்பியன்ஸ் கிண்ணத்தில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்கு இலங்கைக்கு இருந்த அற்ப சொற்ப வாய்ப்பு அற்றுப்போனது.

ட்ரவிஸ் ஹெட் (12) மூன்றாவது ஓவரில் ஆட்டம் இழக்க அவுஸ்திரேலிய ஆட்டம் கண்டதுடன் பங்களாதேஷ் மகிழ்ச்சியால் மிதந்தது. ஆனால், பங்களாதேஷின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

டேவிட் வோர்னரும் மிச்செல் மார்ஷும் 2ஆவது விக்கெட்டில் 120 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவைப் பலமான நிலையில் இட்டனர்.

டேவிட் வோர்னர் 53 ஓட்டங்களைப் பெற்று களம் விட்டகன்றார்.

தொடர்ந்து மிச்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 175 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியை இலகுவாக்கினர்.

மிக வேகமாகத் துடுப்பெடுத்தாடிய மிச்செல் மார்ஷ் 132 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 9 சிக்ஸ்கள் உட்பட  ஆட்டம் இழக்காமல் 177 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டம் இழக்காமல் 63 ஓட்டங்களையும் பெற்றனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் மிகத் திறமையாக அவுஸ்திரேலிய இழந்து 306 ஓட்டங்களைக் குவித்தது.

முதல் 6 துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியதன் பலனாக பங்களாதேஷ் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் தலா 36 ஓட்டங்களைப் பெற்றதுடன் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்து 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (106 - 2 விக்.)

அவர்களைத் தொடர்ந்து நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, தௌஹித் ரிதோய், மஹ்முதுல்லா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

ஷன்டோ 45 ஓட்டங்களையும் ரிதோய் 74 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து மஹ்முதுல்லா (32), முஷ்பிக்குர் ரஹிம் (21), மெஹிதி ஹசன் மிராஸ் (29) ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் அடம் ஸம்பா 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 22ஆக உயர்த்திக்கொண்டார். அவரை விட சோன் அபொட் 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று...

2024-02-23 21:56:41
news-image

பென்ஸ் - வெஸ்லி சமஅளவில் மோதல்...

2024-02-23 21:20:49
news-image

ஸாஹிரா றக்பி நூற்றாண்டு அணிக்கு எழுவர்...

2024-02-23 17:57:46
news-image

றோயல் - தோமியன் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 00:42:42
news-image

நடுவருடன் மோதல் - வனிந்து போட்டி...

2024-02-22 15:09:19
news-image

விக்ரம் - ராஜன் - கங்கு...

2024-02-22 14:49:14
news-image

மூன்றாவது ரி20 போட்டியில் நோபோல் சர்ச்சை...

2024-02-22 13:51:18
news-image

இலங்கையை 3 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல்...

2024-02-22 00:28:59
news-image

இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான நான்காவது...

2024-02-21 16:12:47
news-image

ஸாஹிரா கால்பந்தாட்டத்திற்கு பிக்ஸ்டன் அனுசரணை

2024-02-21 14:45:53
news-image

வரலாற்றில் முதல் தடவையாக மெராயா பாடசாலையில்...

2024-02-21 11:02:27
news-image

ரணில் அபேநாயக்க ஞாபகார்த்த கிண்ணத்தை 6...

2024-02-21 11:01:35