ஜனநாயகத்தை பாதுகாக்கத் தவறினால் நம்பிக்கை இழக்கும் இளைஞர்கள் வன்முறைக்கும் அடிப்படைவாதத்துக்கும் செல்வார்கள் - இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

11 Nov, 2023 | 07:55 PM
image

ஜனநாயகத்தை பாதுகாக்க தவறினால். இதன் மூலம் நம்பிக்கை இழக்கும் இளைஞர்கள் வன்முறைக்கும் அடிப்படைவாதத்துக்கும் செல்வார்கள். அதற்கு நாங்கள் இடமளி்க்கக்கூடாது. அதனால் ஜனநாயக நிறுவனங்களில் சேவையாற்றுபவர்கள், பொறுப்புடனும் நீதியாகவும்  ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், 

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற தேர்தல் சட்டம் மாகாணசபை தேர்தல் சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டம் இந்த மூன்று சட்டங்களிலும் திருத்தம் மேற்கொண்டு வந்து, இளைஞர்களுக்கு நூற்றுக்கு 25 வீத கட்டாய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற பிரேரணை ஒன்றை கொண்டுவந்தோம். அந்த பிரேரணைகளில் மூன்றில் இரண்டு இன்று அனுமதிக்கப்பட்டது. ஒன்று பாராளுமன்ற இளைஞர் பிரதிநிதித்துவம் மற்றது உள்ளூராட்சி தொடர்பான இளைஞர் பிரதிநிதித்துவம்.

தற்போது இது அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அரசியலமைப்பு சபைக்கு இந்த பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படும். தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர் சட்டமாகும் என எதிர்பார்க்கிறோம். 

ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவத்தின் ஆசிர்வாதத்துடன் கட்சியின் செற்குழுவில் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரமே நான் இந்த பிரேரணையை கொண்டு வந்தேன். என்றாலும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம்  தனிநபர் பிரேரணை ஒன்றை கொண்டுவரும் போது பாரியதொரு சிரமத்தை எடுக்கவேண்டி ஏற்படுகிறது.

சட்ட ஆலோசனைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு பிரேரணையை சமர்ப்பித்த பின்னர் குறித்த அமைச்சு எனது 3 பிரேரணைகளுக்கும் பரிந்துரை அனுப்பும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.

ஆனால் 6 மாத காலத்துக்குள் குறித்த அமைச்சு அந்த பரிந்துரைகளை வழங்காவிட்டால் பிரேரணையை சமர்ப்பித்த உறுப்பினர் தான் விரும்பும் திகதிக்கு அந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் கலந்துரையாட முடியும் என பாராளுமன்ற நிலையியற் கட்டளையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன் பிரகாரம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மாகாண சபை  மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநித்துவம் தொடர்பாக நான் கொண்டு வந்த 3 பிரேரணைகளுக்கும் குறித்த அமைச்சு பரிந்துரை வழங்கியிருக்கவில்லை. 

அதனால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ளன. அதனால் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் இந்த பிரேரணைகள் மூன்றையும் பாராளுமன்றத்தில் கலந்துரையாட நடவடிக்கை எடுக்குமாறு  கேட்டிருந்தேன்.

ஆனால் எனது கோரிக்கைக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.எ ன்றாலும் இந்த கடிதம் பாராளுமன்ற சட்டவரைபு திணைக்களம் ஊடாகவே அனுப்பப்பட்டது.

என்றாலும் அதற்கு பதில் கிடைக்கவில்லை. இது தொடர்பாக நான் பல தடவைகள் நினைவு படுத்தி சபாநாயகர்இபாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோருக்கு எழுதினேன். அதேநேரம் சபாநாயகரை சந்தித்து இது தொடர்பாக தெரிவித்தேன். 

செயலாளரை சந்தித்து பேசினேன்.எதற்கும் பதில் கிடைக்கவில்லை. அதன் பிரகாரம் சட்டவரைபு திணைக்களத்துக்கு கடிதம் எழுதினேன்.அதற்கும் பதில் இல்லை. 

இறுதியாக எனது பிரேரணைக்கு  பல மாதங்களுக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் யோசனை ஒன்றை கொண்டு வந்திருக்கிறார்.

அது ஒரு நோக்கத்துக்காகவே கொண்டு வரப்பட்டிருக்கிறது.பொதுவாக பாராளுமன்றத்தில் ஏதாவது ஒரு விடயத்துக்காக யாராவது ஒருவர் ஒரே மாதிரி பிரேரணை ஒன்று கொண்டு வந்தால் அதனை ஏற்றுக்கொள்வது நெறிமுறைகளுக்கமைய பிரச்சினையாகும்.உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தை மாத்திரமாவது முன்னுக்கு கொண்டு செல்லும் முயற்சி அரசாங்கத்துக்கு இருந்தது. 

என்றாலும் தற்போது எனது பாராளுமன்ற தேர்தல் சட்டம் மற்றும் மாகாணசபை தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பாக எனது பிரேரணை பெரும்பாலும் அனுமதிக்கப்பட்டே இருக்கிறது. 

இருந்தபோதும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டம் தொடர்பாக அரசாங்கம் எனது  பிரேரணையை முந்திக்கொண்டு  பல மாதங்களுக்கு பின்னர் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பிரேரணயை மாத்திரம் சமர்ப்பித்திருந்தது.

அரசாங்கம் இந்த பிரேரணையை விரைவாக கெண்டு வருவது உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.

ஆனால் நான் அது தொடர்பில் விளக்கமளிக்க செல்லவில்லை. என்றாலும் இது நம்பகத்தன்மையை இல்லாமலாக்கும் செயல் என்பதால் நான்  பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை எழுப்பினேன்.

இதன்போது பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமை சட்டத்தில் (ஆ) உப பிரிவில் 1இ2இ3இ4இ சரத்துக்கள் மீறப்பட்டிருப்பதாக சபாநாயகருக்கு தெரிவித்தேன். 

ஏனென்றால் இந்த சட்டமூலங்கள் இரண்டுக்குமான பரிந்துரைகளை வெவ்வேறாக அனுப்புமாறு பாராளுமன்ற அரசியலமைப்பு சபை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு இரண்டு தடவைகள் எழுதியிருந்தது. அந்த கோரிக்கைகளுக்கு அமைச்சு பதில் வழங்கவில்லை.  

பாராளுமன்ற செயற்குழுக்கள் செயற்படுவது சபாநாயகரின் உத்தரவுக்கமையவாகும். அப்படியானால் பாராளுமன்ற குழுவொன்றின் உத்தரவொன்றை யாராவது மீறுவதாக இருந்தால் அது பாராளுமன்றத்துக்கு செய்யும் அகெளரவமாகும்.

பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமை சட்டத்தை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை நான் பாராளுமன்றத்தில் எழுப்பினேள்.அதன் பின்னர் சபாநாயகர் இந்த விடயத்தை சிறப்புரிமை குழுவுக்கு ஆற்றுப்படுத்தினார்.

சிறப்புரிமை குழுவின் தலைவர் சமல் ராஜபக்ச தலைமையில் கடந்த வாரம் இது தொடர்பான கூட்டம் இடம்பெற்றது.அந்த கூட்டத்தில் ஆளும் எதிர்க்கட்சியை சேர்ந்த பல கட்சிகளின் உறுப்பினர்கள் பலரும் இருந்தனர்.இதன்போது இந்த விடயத்தில் தவறு ஏற்பட்டுள்ளதென அனைவரும் ஏகமனதாக தீர்மானித்தனர்.

முதலாவது வந்த பிரேரணையை பிற்படுத்தி இரண்டாவதாக வந்த பிரேரணையை  முன்கூட்டி எடுப்பது ஒழுக்க நெறிமுறைகளுக்கும் முரணானது என சமல் ராஜபக்ச ஏற்றுக்கொண்டார்.

அத்துடன் இதனை சரி செய்யும் வரை இரண்டாவது வந்த இந்த பிரேரணை பாராளுமன்ற கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்வதை நிறுத்துமாறு சபாநாயகருக்கு எழுதுவதாக சமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

அத்துடன் கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது.அதில் செயலாளர் நாயகத்துக்கு பதிலாக பிரதி செயலாளர் அதில் கலந்து கொண்டிருந்தார்.

இதில் அநுரகுமார திஸாநாயக்கஇகஜேந்திர குமார் பொன்னம்பலம்இலக்ஷ்மன் கிரியெல்ல என அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இதில் தவறு இடம்பெற்றுள்ளதுஇஅதனால் அதனை சரி செய்யும் வரை இடைநிறுத்துமாறு தீர்மானித்தனர்.

அத்துடன் அடுத்த பாராளுமன்ற நடவடிக்கைகள் குழுவில் இது தொடர்பாக கலந்துரையாடி தீர்மானிக்கும் வரை இந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என அந்த குழுவில் கேட்டுக்கொண்டதாக எரான் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

இந்த அனைத்து கோரிக்கைகளையும் மீறி பின்னர் வந்த பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதித்துக் கொண்டனர்.இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். பாராளுமன்றத்துக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இணைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற இந்த பிரேரணையை நான் கொண்டு வந்ததுஇநாட்டில் இருக்கும் சனத்தொகையில் அரைவாசிப்பேர் இளைஞர்களாகும். 

பாராளுமன்றத்தில் 35 வயதுக்கு குறைந்தவர்கள் 5 வீதம் கூட இல்லை. இளைஞர்களின் நம்பகத்தன்மை இல்லாமல் போயுள்ளது.தற்போது இடம்பெறுகின்ற முறைமை மற்றும் ஆட்சியானர்கள் தொடர்பில் இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போயிருக்கிறது.இந்த நம்பிக்கையில்லா தன்மையை மேலும் உறுதிப்படுத்தும் விடயங்களை செய்யக்கூடாது.

1642 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசியல் அதிகாரம் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் அரசர்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் மோதல் ஒன்று இடமபெற்ற சந்தர்ப்பத்தில் அப்போது இருந்த சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை நான் சபாநாயகருக்கு எடுத்துக்கூறினேள்.

அதாவது அரசர் பாராளுமன்றத்தில் இருக்கும் 5 பேரை கைது செய்ய ஆட்களை அனுப்பி இருந்தார்.அப்போது பிரித்தானிய பாராளுமன்ற சபாநாயகராக வில்லியம் லெம்தோல், வந்தவர்களுக்கு தலைசாய்த்து, எனக்கு உங்களை காண்பதற்கு கண்களும் இல்லை பேசுவதற்கு நாவும் இல்லை.உறுப்பினர்கள் சபையின் சேவகரான நான்இஅவர்கள் சொல்வது போல் செயற்படுவேன் என்றார்.

இந்த சபாநாயகரின் பரம்பரையில் வந்த நீங்கள் கட்சி பேதமின்றி உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பது உங்களது பொறுப்பு என்பதையும் இந்த சபையை நீதியாகவும் நேரமையாகவும் நடத்துவதும் உங்களது பொறுப்பு என்பதையும் நான் சபாநாயகருக்கு நினைவு படுத்தினேள். 

இருந்தபோதும் இளைஞர்கள் பிரதிநிதி்த்துவத்தை அதிகரிக்கும் எனது பிரேரணையை தள்ளிவட்டு பிறகு வந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் அனுமதித்த நடவடிக்கை தொடர்பில் கவலையடைகிறேன்.இருந்தபோதும் எதிர்கால இளைஞர்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சிந்தித்து பாராளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க எடுத்த பிரேரணை என்னால் சமர்ப்பிக்க முடியுமாகியமையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இது தொடர்பில் நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டு்ம். எனவே எமது நிறுவனங்களில் ஜனநாயகத்தை பாதுகாக்க தவறினால். இதன் மூலம் நம்பிக்கை இழக்கும் இளைஞர்கள் வன்முறைக்கும் அடிப்படைவாதத்துக்கும் செல்வார்கள்.

அதற்கு நாங்கள் இடமளி்க்கக்கூடாது. அதனால் ஜனநாயக நிறுவனங்களில் சேவையாற்றுபவர்கள், பொறுப்புடனும் நீதியாகவும்  ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறன்களைக் கண்டறிந்து இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கான...

2024-11-08 16:16:21
news-image

அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியடைந்துள்ளனர் ;...

2024-11-08 15:50:11
news-image

3,249 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து...

2024-11-08 22:49:30
news-image

சட்டவிரோத மரக்களஞ்சியசாலை வைத்திருந்ததாக கயுவத்தைக்கு பொறுப்பான...

2024-11-08 21:24:25
news-image

மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக சர்வதேச...

2024-11-08 21:19:51
news-image

அனர்த்த நிவாரணம் மற்றும் கண்காணிப்புத் திட்டத்திற்காக...

2024-11-08 20:27:34
news-image

திரிபோஷா நிறுவனத்தை மூடிவிட அரசாங்கம் எடுத்திருக்கும்...

2024-11-08 20:18:10
news-image

தேர்தல் சட்டங்களை மீறிய 11 வேட்பாளர்கள்...

2024-11-08 20:10:49
news-image

பிரதமரின் செயலாளர் மற்றும் பிரித்தானிய உயர்...

2024-11-08 19:31:51
news-image

தொழிற்சங்கங்களையும் ஊடகங்களையும் அடக்கி மக்களின் குரலை...

2024-11-08 17:23:14
news-image

பிரமிட் திட்டத்தின் ஊடாக பெருந்தொகை பணத்தை...

2024-11-08 18:42:46
news-image

அக்குரணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது!

2024-11-08 19:23:54