தீபாவளி திருநாளை எங்களை நாங்கள் புனிதப்படுத்தும் நாளாகக் கருதி, மகிழ்வுடன் கொண்டாடுவோம். அல்லலுறுபவர்களுக்காக ஆண்டவனை மன்றாடுவோம். சிறைக் கூடங்களிலும் அகதி முகாம்களிலும் ஆதரவற்ற இல்லங்களிலும் வாழ்வோருக்காக ஒரு நிமிடமாவது பிரார்த்திப்போம் என அகில இலங்கை இந்து மாமன்றம் தீபாவளிக்கான வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அதில் இந்து மாமன்றத்தினால் மேலும் தெரிவிக்கப்படும் செய்தியாவது :
தீபாவளி எனப்படுவது எதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு பண்டிகை? உலகில் அறம் வென்று, அதர்மம் தோற்றதை குறிப்பதே அது. அதர்மங்களின் ஒருசேர் உருவினனாகத் தோற்றம் கொண்ட நரகாசுரன் அவனது அட்டூழியங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை, தேவர்களை, முனிவர்களைக் காத்தருள, கண்ணனால் சம்ஹாரம் செய்யப்படும்போது, நரகாசுரன் தான் செய்த தவறை உணர்ந்து கண்ணனிடம் மன்னிப்பு கேட்ட நாளே தீபாவளி எனப்படும் கர்ண பரம்பரை கதையைத் தவிர வேறு பல கதைகளும் வழக்கில் உள்ளன.
எனினும், இவற்றை எல்லாம் விட்டுவிட்டு தீபாவளித் திருநாளில் விடிவு கேட்டு விளக்கேற்றிப் பரம்பொருளை வணங்குவோம். இயன்ற வரை பிறருக்கு இடையூறின்றி வாழ முற்படுவோம்.
நாம் செய்த நல்ல காரியங்களை எண்ணி மகிழ்வோம். நன்மை செய்யவேண்டிய காலத்தில் நாம் நன்மை செய்யத் தவறியதையிட்டு இறைவனிடம் மன்னிப்பு கேட்போம்.
வீணான பழக்கங்களில் பொழுதைப் போக்காமல் சமுதாயத்துக்கு எழுச்சி தரும் காரியங்களில் ஈடுபடுவோம். ஏழை எளியவர்களுக்கு உதவுவோம். இது போன்ற நல்ல நாட்களிலாவது கடவுளிடம் நாம் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்போம்.
தீபாவளித் திருநாள் எம்மை நாம் திருத்துவதற்குரிய திருநாள். அகந்தையை ஒழித்து அனைவரையும், ஏன் பகைவரையும் கூட அரவணைக்கும் நன்னாள்.
சாதிக்கப் பிறந்த மனிதன் தினமும் சஞ்சலப்பட்டுக்கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. புறப்படுவோம். இன்றே புத்தூக்கத்துடன் எம் பயணத்தை தொடர்வோம்.
கருணையையும் காருண்யத்தையும் அரணாகக் கொண்டு எம் கடமைகளைச் செய்வோம். பகையை வளர்க்காமல் பிறரைப் பண்பினால் வெல்வோம். மூத்தோரை மதிப்போம். இளையோரை வாழ்த்துவோம்.
இந்த மனிதனைச் சந்திப்பதனால் ஆறுதல் கிட்டும் என மற்றவர் உள்ளம் உங்களை வாழ்த்த வாழப் பழகுவோம். தீபாவளி நாளில் புதிய ஆடை அணிந்து புதிய எண்ணங்களையும் எம் உள்ளத்துக்கு வழங்குவோம்.
தர்மம் ஒரு நாளும் தோற்பதில்லை. அதர்மம் ஒரு நாளும் நிலைப்பதில்லை. இது அனைவரும் அறிந்த உண்மை. தீபாவளித் திருநாளை எங்களை நாங்கள் புனிதப்படுத்தும் நாளாகக் கருதி, மகிழ்வுடன் கொண்டாடுவோம்.
அல்லலுறுபவர்களுக்காக ஆண்டவனை மன்றாடுவோம். சிறைக் கூடங்களிலும் அகதி முகாம்களிலும் ஆதரவற்ற இல்லங்களிலும் வாழ்வோருக்காக ஒரு நிமிடமாவது பிரார்த்திப்போம்.
கடவுள் எமக்கு தந்தவற்றுக்கு என்ன கைம்மாறு செய்வோம் என சிந்தித்து தீபாவளியை பிரார்த்தனைக்குரிய நாளாகக் கருதி வழிபாடு செய்து வாழ்வாங்கு வாழ்வோமாக!
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM