மலையக சமூகத்தின் 200 வருட கால வரலாற்றில் இம்முறை கொண்டாடப்படும் தீபாவளியானது நிச்சயமாக நமது சமூகம் எதிர்பார்த்திருந்த மாற்றத்தை உருவாக்கித் தரும். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மலையக சமூகத்தின் அடுத்த கட்ட நகர்வு என்பது இனி மேலும் தடைப்படுவதற்கான சாத்தியமே கிடையாது என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாச்சலம் அரவிந்தகுமார் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தின் பங்காளிகளாக மலையக உறவுகள் விளங்குகின்றனர்.
200 வருட கால வரலாற்றுடன் தொடர்புடையவர்களாக இருந்த போதிலும் எமக்கான அங்கீகாரத்தை பெறுவதில் நாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இது கவலைக்குரிய விடயமாகும்.
ஆனபோதிலும், மலையக சமூகத்தின் வரலாறு இன்று பட்டி தொட்டி எல்லாம் உணர்த்தப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். அந்த வகையில், யார் விரும்பினாலும் யார் விரும்பாவிட்டாலும், மலையக சமூகத்தின் அடுத்த கட்ட நகர்வு என்பது இனி மேலும் தடைப்படுவதற்கான சாத்தியமே கிடையாது என்பதில் சந்தேகம் இல்லை.
மலையக சமூகத்துக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான காலம் தற்போது கனிந்திருக்கிறது.
கடந்த ஒரு தசாப்த காலமாக மலையக மக்களின் மேம்பாடு தொடர்பான நகர்வுகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை அதன் வேகம் தற்போது அதிகரித்திருப்பதும் கண்கூடாகும்.
ஆகவே இம்முறை நாம் கொண்டாடுகின்ற தீபாவளியானது நமது சமூகத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு நிச்சயமாக வழிவகுக்கும். அந்த நல்லெண்ணத்தோடு உலக வாழ் அனைத்து தமிழர்களுக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM